பைக்கில் உட்கார்ந்த நிலையில் வாலிபரின் உடல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை :
மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்த நிலையில் எரிந்து கிடந்தார் ஒரு வாலிபர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்த நிலையில் எரிந்து கிடந்தார் ஒரு வாலிபர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.பல்லாவரத்தில் ஒரு செட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்த நிலையில் இந்தப் பிணம் கிடைத்தது. உடல் முழுக்கவும் எரிந்து போயுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வாலிபரின் பெயர் பாபு என்றும் 25 வயதான இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
ஒரு நகை ஆசாரியிடம் பணியாற்றிவிட்டு விலகிச் சென்று மீண்டும் அந்தப் பணிக்குத் திரும்பியிருக்கிறார். அந்த ஆசாரியின் கடைக்குப் பின்னால் உள்ள ஒரு செட்டுக்குள் நின்ற நிலையில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்த நிலையில் எரிந்து போய் பிணமாக இருந்தார் பாபு.
இந்தக் கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications