For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநருக்கு கருணாநிதி நெருக்கடி: ஜெ புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை :

சுனாமி, மழை வெள்ள பாதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு போன்றவற்றின்போதெல்லாம்பதைபதைக்காத கருணாநிதி, கேபிள் டிவி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தவுடன் ஓடோடிச் சென்று ஆளுனரை சந்தித்ததுசட்டவிரோதமானது, மக்கள் விரோத செயல் என முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்குதல் தொடுத்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், அதிமுக உறுப்பினர் சேகர்பாபு எழுந்து, தமிழக கேபிள் டிவி சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டவுடன், அதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஆளுனரை சந்தித்து இந்த சட்ட மசோதாவுக்கு அனுமதிஅளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் கருத்தை அறிய விரும்புகிறேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா பேசுகையில்,

கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்தி, நிர்வாகம் செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்தபோது,வழக்கம் போல திமுகவினர் அவையில் இல்லை. ஆனால் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட அரை மணி நேரத்திலேயே திமுகதலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் ராஜ்பவனுக்கு சென்று மேதகு ஆளுநரை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு கேபிள் டிவி சட்ட மசோதாவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நலன் கருதி கேபிள் டிவி நிறுவனங்களைக்கையகப்படுத்தி, சொத்துக்களை மாற்ற வகை செய்யும் மசோதவை தாக்கல் செய்த அரைமணி நேரத்திலேயே கருணாநிதி எதற்காகஆளுனரை சந்திக்கிறார்?

தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்புகள் கருணாநிதி குடும்பத்தினரின் ஏகபோக சொத்தாக உள்ளதை அனைவரும் அறிவர். இதன்காரணமாக பொதுமக்கள் படும் இன்னல்கள், சொல்லணா துன்பங்களையும் அனைவரும் அறிவர். இந்த சட்ட முன்வடிவுசட்டமாக்கப்பட்டால் தனது குடும்பத்தினரிடம் உள்ள ஏகபோக உரிமை பறி போய் விடுமோ என்று, அங்கமெல்லாம் பதைபதைக்க ஐம்புலனும் துடிதுடிக்க ராஜ்பவனை நோக்கி ஓடியுள்ளார்.

தமிழகத்தை சுனாமி பேரலைகள் சின்னாபின்னமாக்கியபோது இதுபோன்ற பதற்றம் அவருக்கு ஏற்பட்டதுண்டா? பாதிக்கப்பட்டமக்களை நேரில் சென்று பார்த்தாரா?அக்டோபர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு கன மழையும், பெருவெள்ளமும் தமிழகத்தைகலங்கடித்ததே, அப்போது கலங்கினாரா, இல்லையே.

மத்திய அரசு அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபோது, ஒருமுறையேனும் பதறியடித்துசம்பந்தப்பட்டவர்களைப் போய்ப் பார்த்து விலையைக் குறைக்கச் சொன்னாரா? இல்லையே.

மத்திய அரசு அரிசி விலையை ஏற்றியும், அரிசி ஒதுக்கீட்டைக் குறைத்தும் மக்கள் மீது இரட்டைத் தாக்குதல் தொடுத்தபோதும்ஏற்படாத பதற்றம் இப்போது மட்டும் ஏற்பட என்ன காரணம்?

சுனாமி, வெள்ளப் பெருக்கு, பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, அரிசி ஒதுக்கீடு குறைப்பு ஆகியவையெல்லாம்தமிழக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள். கருணாநிதிக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ ஏற்பட்ட பாதிப்பு அல்ல.

எனவேதான் இந்த பாதிப்புகளின்போதெல்லாம் எந்தவித பதற்றமோ, பரபரப்போ காட்டவில்லை. ஆனால் கேபிள் டிவி சட்ட ம்மசோதாவால் பாதிக்கப்படவப் போவது தனது குடுபம் என்றவுடன் இவ்வளவு பதட்டம் அடைகிறார், பதைபதைப்பு கொள்கிறார்.

மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தால், தனது குடும்பத்தின் ஏகபோக உரிமை, ஏகாதிபத்தியம் பறி போய்விடுமே என்றுதான் துடிக்கிறார்.

கருணாநிதி யார்? அவர் இந்த அவையின் உறுப்பினர். சட்ட முன்வடிவு மீது விவாதம் மேற்கொள்ளப்படும்போது அதில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பும், வசதியும் வாய்க்கப் பெற்ற கருணாநிதி, நேர் வழியில் விவாதிப்பதை விட்டுவிட்டு, கள்ளத்தனமாக ஆளுனரை போய் சந்தித்துள்ளது ஜனநாயக விரோதமானது. இது அரசமைப்புக்கு எதிரான செயலாகும்.

சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொள்ளாமல், ஆளுனரை சந்தித்து அவரை இன்புளூயன்ஸ் செய்ய முயற்சித்துள்ள மக்கள்விரோத செயலாகும். கருணாநிதி என்னதான் பதட்டப்பட்டாலும், யாரைப் போய்ப் பார்த்தாலும் இந்த சட்ட மசோதா நிச்சயம்நிறைவேற்றப்படும், மக்கள் நலனைக் காக்க நான் அயராமல் பாடுபடுவேன் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த கடுமையான பேச்சினால் ஆவேசப்பட்ட திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் காளிமுத்துவை நோக்கிச்சென்றனர். தாங்கள் பதில் சொல்ல அனுமதி கோரினர்.

இருப்பினும் அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காத சபாநாயகர், அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

காங்., பாமகவையும் வறுத்தெடுத்த ஜெ.

கருணாநிதியை கடுமையாக சாடிய கையோடு காங்கிரஸ், பாமகவையும் ஒரு பிடி பிடித்தார் ஜெயலலிதா.

காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில் குறுக்கிட்ட ஜெயலலிதா,

ஊழல், லஞ்ச, லாவண்யம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் பேசுகிறார். இதற்கெல்லாம் அவர் சார்ந்துள்ள கட்சி அருகதைபடைத்ததுதானா என்பதை முதலில் அவர் யோசிக்க வேண்டும்.

போபர்ஸ் ஊழல் வழக்கில் இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியா மீது இந்தியாவில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை. நிரபாரதி என்று குவாத்ரோச்சி விடுவிக்கப்படவில்லை.

சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை அது முடக்கி வைத்துள்ளது. இந் நிலையில்மத்திய அரசின் சட்ட அமைச்சர், வங்கிக் கணக்குகளை விடுவிக்கலாம் என சிபிஐ மூலம் உத்தரவிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் லஞ்ச லாவண்யம் குறித்துப் பேசுவதா, அவருக்கு அதற்கு அருகதைஉள்ளதா என்றார்.

அதேபோல, பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், சமூக நீதியைக் காக்கும் கட்சியாக பாமக விளங்குவதாக குறிப்பிட்டார்.அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா,

சமூக நீதியைக் காப்பதாக பாமக கூறுவதை எப்படி நம்ப முடியும்? அப்படி இருக்குமானால் அவர்களது கட்சியை விட்டு எதற்காகதலித் எம்.எல்.ஏக்கள் விலகி வெளியேறுகிறார்கள்? தலித்துகளை அவர்கள் மதிக்கவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X