சிறுசேரி நில விவகாரம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சென்னை அருகே சிறுசேரி சிப்காட் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றது தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும்சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியவை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கூறி சென்னை உயர்நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறுசேரியில்சிப்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான 103 ஏக்கர் நிலத்தை மிகவும் குறைந்த விலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றுள்ளது.சம்பந்தப்பட்ட சிப்காட் நிலத்தை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றுள்ளது. மிகவும் குறைந்த விலையில் இந்த நிலத்தை விற்றுள்ளதன் மூலம் தமிழகஅரசுக்கு ரூ. 195 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த நில விற்பனையை ரத்து செய்து, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கோரியிருந்தார். இதே போல ரோஸ் நாகராஜன் என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள்விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசு மற்றும் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனு மீதானஅடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications