திமுகவிலிருந்து விலகும் 3 கட்சிகள்: செங்கோட்டையன் திடுக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க 3 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிமுக அமைப்புச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வருங்கால வைப்பு நிதி வட்டிக் குறைப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி செங்கோட்டையன் பேசுகையில், அதிமுக மக்கள்சக்தியை மட்டுமே நம்பியுள்ளது.
திமுக தலைமையில் எத்தனைக் கட்சிகள் கொண்ட கூட்டணி இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.
உண்மையை சொல்லப் போனால் விரைவில் திமுக கூட்டணி கலகலக்கப் போகிறது. அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 கட்சிகள்அங்கிருந்து வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் கொண்டுள்ளன. விரைவில் திமுக கூட்டணியில் பிளவு வரும்.












Click it and Unblock the Notifications