கோயம்பேடில் ரூ.25 லட்சம் ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (தென் மண்டலம்) இயக்குனர் சங்கர் ஜீவால் வெளியிட்டுள்ள செய்தியில்கூறப்பட்டு இருப்பதாவது:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும் படியாக நின்றிருந்த3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்த போது 255 கிராம் ஹெராயின் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில்அவர்கள் தொண்டியைச் சேர்ந்த சேகு நைனா, சேக் அலி மற்றும் கீரனூரைச் சேர்ந்த பஷீர் அகமது என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications