For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்கள் மாநாட்டில் சலுகை மழை?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாநாட்டின் போது முதல்வர் ஜெயலலிதாபறிக்கப்பட்ட பல சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை தமிழகஅரசு ரத்து செய்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இருப்பினும் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக பயந்து போயிருந்த அவர்கள் சலுகைகளைத் திரும்பத் தரக்கோரி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்த முன்வரவில்லை.

இருப்பினும், அவ்வப்போது பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பத் தரக் கோரி ஆங்காங்கே கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சட்டசபையில், ரூ. 1200 கோடி மதிப்புள்ள திட்டங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குஜெயலலிதா அறிவித்தார். அவற்றில் முக்கியமானது அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை சேர்ப்பது என்றஅறிவிப்பு.

இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வேலை நியமன தடைச் சட்டத்தையும்முழுமையாக ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதனால் புதிதாக அரசு வேலைகளுக்கு ஆளெடுப்பு தொடங்கும்.

இந்த சலுகைகளுடன் பறிக்கப்பட்ட பிற சலுகைகளையும் முதல்வர் அறிவிப்பார் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எதிர்பார்த்தனர். ஆனால் அதுகுறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. வருகிற 27ம் தேதியுடன் தமிழகசட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் முடிவடைகிறது.

இதற்குள் சலுகைகள் குறித்து ஜெயலலிதா ஏதேனும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இருப்பினும், சட்டசபைக் கூட்டத்தில் இதை அறிவிக்காமல், சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தமிழக அரசு அலுவலர்ஒன்றியத்தின் மாநாட்டின்போது ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

தமிழக அரசு அலுவலர் ஒன்றியத்தின் 56வது மாநில மாநாடு மற்றும் அரசு ஊழியர்களின் பொது மாநாடு சென்னையில் கடந்தஆண்டே நடப்பதாக இருந்தது. ஆனால் மழை, வெள்ளம் காரணமாக இந்த மாநாடு இரண்டு முறை தள்ளிப் போடப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் சட்டசபை முடிவடைந்தபின்னர் இந்த மாநாட்டை நடத்த தற்போது முடிவாகியுள்ளது. சென்னை கோயம்பேடு அருகே மாநாடு நடத்த இடம்தேர்வாகியுள்ளது.

விரைவில் மாநாட்டு மேடை உள்ளிட்ட பிற பணிகள் தொடங்கும். பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாடு நடக்கக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில்முதல்வர் ஜெயலலிதா பேசவுள்ளார்.

அப்போது பறிக்கப்பட்ட சலுகைகள் குறித்து அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் முன் அரசு ஊழியர்களின் பேராதரவு இருந்தால் தான் நல்லது என்ற முடிவில் ஜெயலலிதாஇருப்பதாக தெரிகிறது.

இதன் காரணமாக படிப்படியாக ஒவ்வொரு அறிவிப்பாக அவர் வெளியிட்டு வருகிறார். மாநாட்டின்போது அனைத்து அரசுஊழியர்கள், ஆசிரியர்களையும் குளிர்வித்து விட்டால் தேர்தலின் போது தேவையில்லாத பிரச்சினைகள் எழாது என்றுமுதல்வர் தரப்பில் கருதப்படுகிறது.

எனவே சென்னை மாநாடு தங்களது வாழ்க்கையில் மீண்டும் ஒளியேற்றி வைக்கும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X