ஜெ.வுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நன்றி
தேனி:
மாட்டுத் தொழுவத்தில் வசித்து வரும் எனக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் வீடு வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிஎன முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணவேணி கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணவேணி வறுமையில் வாடி வருவதைஅறிந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் இலவச வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து கிருஷ்ணவேணி கருத்து தெரிவிக்கையில், நான் கடந்த 1962ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆண்டிப்பட்டி (தனி)தொகுதியின் (தற்போதைய சேடப்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளை உள்ளடக்கியது) காங்கிரஸ் எம்.எல்.ஏவாகதேர்ந்தெடுக்கப்பட்டேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
எனக்கு அப்போது 35 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. இந்த நிலத்தில் மகாத்மாஜி பெண்கள் இல்லத்தை நடத்தி வந்தேன்.பின்னர் அரசிடம் இந்த இடத்தையும், காப்பகத்தையும் ஒப்படைத்து விட்டேன்.
எனது கணவரும் எம்.எல்.ஏதான். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அவர் இருந்தார்.பெருந்தலைவர் காமராஜர் இறந்த போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சென்னையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்குச்சென்றார். அங்கு இறந்து விட்டார்.
கணவர் மறைவுக்குப் பின்னர் எனது மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் எனது மகனும் நோய் வாய்ப்பட்டுஇறந்ததால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடனும் அதிகமானது. இதனால் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டேன்.
அப்படியும் கடன் தொல்லை தீரவில்லை. மாதந்தோறும் எனக்குக் கிடைத்து வந்த ரூ. 6000 எம்.எல்.ஏ. பென்ஷனில் ரூ. 5000வரை கடனுக்கே போய் விட்டது. ஆயிரம் ரூபாயில் தான் ஜீவனம் செய்து வருகிறேன்.
எனது நிலையை அறிந்த முதல்வர் எனக்கு நிதியுதவியும், வீடும் தருவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.
நான் அடிப்படையில் ஒரு காங்கிரஸ்காரி, எனவே வருகிற சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கே ஓட்டு போடுவேன்.இருப்பினும், எனது உறவினர்கள், நண்பர்கள்,தெரிந்தவர்களை அதிமுகவுக்கே ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்வேன்.என்னால் பிரசாரத்திற்கு செல்ல முடியாது, எனது உடல் நலம் அதற்கு ஒத்துவராது என்றார் கிருஷ்ணவேணி.












Click it and Unblock the Notifications