பிப்ரவரியில் ஜெனீவாவில் புலிகள்-இலங்கை பேச்சு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தனது நாட்டில் நடத்த சுவிட்சர்லாந்துமுன் வந்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே தாய்லாந்திலும் ஜெர்மனியிலும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்துஇப்போது அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்ய நார்வே முயற்சி எடுத்துள்ளது. ஆனால்,ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் தான் பேச்சு நடத்துவோம் என இலங்கை அரசு கூறி வந்தது. இதை புலிகள் ஏற்கவில்லை.நார்வேயில் பேச்சு நடத்த வேண்டும் என புலிகள் கூறி வந்தனர்.

இந் நிலையில் தனது நாட்டில் பேச்சு நடத்தலாம் என சுவிட்சர்லாந்து யோசனை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைதிமுயற்சிகளில் நார்வேவுக்கு முழு ஆதரவும் தரப் போவதாக சுவிஸ் கூறியுள்ளது.

சுவிஸ்சில் பேச்சு நடத்த விடுதலை புலிகள் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அதே போல இலங்கை அரசும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டது.

இதனால் இலங்கை விவகாரத்தில் நல்லதொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளை சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில்வைத்துக் கொள்ளலாம் என கிளிநொச்சியில் புலிகளுடன் பேச்சு நடத்திய பின் நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம்தெரிவித்தார்.

பிப்ரவரியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

முந்தைய பேச்சுவார்த்தைகள் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலில் பாதியில் நின்றது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+