திண்டிவனத்தாரின் அன்னை இந்திரா பேரவை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் திண்டிவனம் ராமமூர்த்தி அன்னை இந்திரா பேரவைஎன்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்தப் பேரவை வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்என்று தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சில தலைவர்கள் புரட்சிக் குரல் எழுப்புவார்கள். அவர்களால் கட்சி வட்டாரம்பரபரப்பு அடையும். காலப்போக்கில் அவர்கள் காணாமல் போவார்கள்.

அந்த வகையில் சமீப காலத்தில் தோன்றியுள்ள ஒரு புரட்சித் தலைவர்தான் திண்டிவனம் ராமமூர்த்தி. புரட்சித் தலைவியின்ஆசியுடன் செயல்படுவதாகக் கருதப்படும் திண்டிவனம் ராமமூர்த்தி இத்தனை காலம் அமைதியாக இருந்தார்.

ஆனால், தேர்தல் வரப் போகும் நிலையில் திடீரென வன்னியர்களுக்கு திமுக கூட்டணியில் முக்கியத்துவம் இல்லை, காங்கிரசிலும்முக்கியத்துவம் இல்லை என்று கூறி பிரச்சனை கிளப்பினார்.

கருணாநிதி எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை பிரயோகித்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் கலகத்தை ஏற்படுத்தி வரும் திண்டிவனம்,ஊர் ஊராகச் சென்று கருணாநிதி எதிர்ப்புப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், ஆட்சியில் காங்கிரஸுக்குப் பங்கு தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினரை தனக்கு ஆதரவாக வளைக்க முயலும் திண்டிவனத்தின் நடவடிக்கைகளை தடை செய்யமுடியாமல் காங்கிரஸ் மேலிடம் முழித்துக் கொண்டுள்ளது.

காரணம் அவர் மீது கை வைத்தால் கட்சியில் உள்ள வன்னியர்களின் ஒட்டுமொத்த பகையை சம்பாதித்துக் கொள்ள நேரிடும் எனகாங்கிரஸ் அஞ்சுகிறது.

இந் நிலையில் அன்னை இந்திரா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை திண்டிவனத்தார் தொடங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,

கிராங்கள்தோறும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தப் பேரவையை தொடங்கியுள்ளோம்.இது காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுதான் (இது எப்படி இருக்கு). இந்தப் பேரவையை கிராமங்கள்தோறும் தொண்டர்கள்தொடங்க வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் கொத்தடிமைகள் அல்ல. சுயமரியாதை, தன்மானத்துடன் காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று காமராஜர்சொன்னார். அதைத்தான் நானும் இப்போது சொல்லி வருகிறேன். எதைச் செய்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இனிமேல் கூட்டணி ஆட்சிதான் ஏற்பட வேண்டும். பெரும்பான்மை இருக்கிறதோ, இல்லையோ,இனிமேல் கூட்டணி ஆட்சிதான் வர வேண்டும். அந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு தந்தே ஆக வேண்டும்.

வரும் தேர்தலில் காங்கிரஸின் தன்மானத்தைக் காப்பவர்களாக செயல்படுவோம். காங்கிரஸுக்கு 70 இடம் வேண்டும், 80 இடம்வேண்டும் என்று சிலர் இன்று குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதே கோரிக்கையை நாங்கள் கேட்டபோது கட்சிக்கட்டுப்பாட்டை மீறக் கூடாது என்று கூறி நோட்டீஸ் அனுப்பினார்கள்.

அறிவாலயத்தின் மறு பதிப்பாகத்தான் சத்தியமூர்த்தி பவன் விளங்கி வருகிறது. சத்தியமூர்த்தி பவனின் மதிப்பை குறைத்துவிட்டார்கள். அறிவாலயமாக சத்தியமூர்த்தி பவனை மாற்றி விடக் கூடாது.

கடந்த முறை சட்டசபைத் தேர்தலின்போதே 60 இடங்களுக்கு மேல் தேவை என்றோம். அப்போது எங்களது வாயை அடக்கிவிட்டார்கள். ஆனால் இந்த முறை விட மாட்டோம். போதிய அவகாசம் உள்ளது. நிறைய நாட்கள் உள்ளன. எனவே இந்த முறை60க்கு ஒரு சீட் குறைந்தாலும் விட மாட்டோம், சும்மா இருக்க மாட்டோம் என்றார் திண்டிவனம்.

காங்கிரசுக்கு 40 சீட் என்ற முடிவில் உள்ளது திமுக. அதில் திண்டிவனத்தின் ஆட்களுக்கு 10 சீட்கள் வரை வாசன் ஒதுக்கினால்மட்டுமே அவர் அமைதியாவார் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் கருணாநிதிக்கு எதிர்ப்பு என்ற பெயரில் அதிமுகவுடன் அவர்கூட்டணி போட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் போய் கூட்டணி ஆட்சி என்றெல்லாம் திண்டிவனம் பேச முடியாது என்பதும்குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் வட மாவட்டங்களில் பாமகவை நிலை குலையச் செய்ய வன்னிய சமூகத் தலைவரான திண்டிவனம் தரப்புக்குஅதிக இடங்களை அதிமுக ஒதுக்கித் தரவும், திண்டிவனத்தின் அமைப்பினரை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவைக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தேர்தலுக்குள் இன்னும் நிறைய அரசியல் வேடிக்கைகள் நடக்கும்.. என்ஜாய்..

திண்டிவனம் மீது நடவடிக்கை:

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் பார்வையாளரான வீரப்ப மொய்லி நிருபர்களிடம் பேசுகையில்,

திண்டிவனம் ராமமூர்த்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார். என்னை சந்திக்குமாறுராமமூர்த்திக்கு தந்தி அனுப்பியுள்ளேன். அவரிடம் பேசிய பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+