தை அமாவாசை: குமரி, ராமேஸ்வரத்தில் மக்கள் வழிபாடு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தை அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் இன்று கன்னியாகுமரியில் த்ரிவேணி சங்கமத்தில் கூடினர்.
தை அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கன்னியாகுமரியில் த்ரிவேணி சங்கமத்தில் மறைந்தமுன்னோர்களுக்கு பிண்டம் வைத்து மரியாதை செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் உள்பட நூற்றுக் கணக்கானோர் கடலில்நீராடினர்.
அதன் பிறகு இவர்கள் கடற்கரை அருகில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாகஅங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதே போல் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியிலும் ஏராளமான மக்கள் கூடினர். இவர்கள் மூதாதையர்களுக்கு திதி செய்துமரியாதை செலுத்திய பிறகு கடலில் நீராடி ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications