சீட்: சென்னையில் குவியும் அதிமுக பிரமுகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் போட்டியிடுவதற்கான டிக்கெட் கேட்டு விண்ணப்பம் வழங்குவதற்காக தமிழகம் முழுவதிலுருந்து அதிமுகபிரமுகர்கள் சென்னைக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 1ம் தேதி முதல் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரான முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ. 10,000 கட்டி விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நாளைமுதல் தேர்தல் சீட் பெற விரும்புவோருக்கான விண்ணப்ப விற்பனை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின்அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அதிமுகவினர் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக சந்தித்த நெருக்கடி தற்போது முற்றிலும் அகன்றுள்ள புதிய சூழ்நிலையில்,அதிமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் உறுதியாக நம்புகின்றனர்.

இதையடுத்து எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்ற வைராக்கியத்தில், அதிமுகவினர் சென்னைக்கு வந்து குவியத்தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே வருகிற 4ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால், அதில்கலந்துகொள்ளவும் அதிமுகவினர் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 141 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்ததேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகியவை இப்போது திமுக அணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+