மு.க.ஸ்டாலின் உள்பட 1000 பேர் கைது
சென்னை:
எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதாவும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜும் உடனடியாக பதவி விலகக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி,துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பு என்று சமீபத்தில்உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவும், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜும் பதவி விலகவேண்டும் என்று கோரி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுகஅறிவித்திருந்தது.இந்த போராட்டத்திற்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை திட்டமிட்டபடி திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடினர். பின்னர்மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி தலைமையில் திமுகவினர் மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்தை நோக்கி செல்ல முற்பட்டனர்.
ஆனால் கூவம் ஆற்றின் ஓரத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து போலீஸாரைக் கண்டித்தும்,ஜெயலலிதாவைக் கண்டித்தும் திமுகவினர் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்வதாகபோலீஸார் அறிவித்து பேருந்துகளில் ஏற்றி திருமண மண்டபங்களுக்குக் கொண்டு சென்றனர்.
திமுகவின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆணையர் அலுவலக வளாகத்திலும், அந்த சாலையிலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications