20 சத ஈரப்பதம் கொண்ட நெல்லும் கொள்முதல்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
20 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லும் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், திருத்தியமைக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் படி நெல் கொள்முதல்செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 1021நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்த நிலையங்கள் மூலம் தினசரி 20,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஏ ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.600ம், சாதாரண நெல்லுக்கு ரூ. 570ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரை நெல் கொள்முதல் நடைபெறும்.
மத்திய அரசின் நெல் கொள்முதல் விதிப்படி, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாகவும், நிறம் மாறியநெல்லின் ஈரப்பதம் 3 சதவீதத்தை தாண்டக் கூடாது என உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக நெல்விளைச்சல் மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகியுள்ளது.
எனவே நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதமாகவும், நிறம் மாறிய நெல்லின் ஈரப்பதம் 5 சதவீதமாகவும் இருக்கலாம் என விதியைதளர்த்துமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி நெல் கொள்முதலை மேற்கொள்ளுமாறு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications