எங்களுக்கும் கவுரமான சீட் வேண்டும்: ஜி.கே.மணி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பாமகவுக்கும் கவுரமான வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள் தங்களுக்கு கவுரமான வகையில் தொகுதிகள்ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. இப்போது அந்த வாசகத்தை பாமகவும் கூறத் தொடங்கியுள்ளது.
சேலம் வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரைஅதிகாரப்பூர்வமாக எதுவும் நடைபெறவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தான் முடிவு செய்வார்.
யார், யாருக்கு எத்தனை சீட் என்பதை கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அவர் தான் நிர்ணயம் செய்வார். அதில் ஏதாவதுபிரச்சினை ஏற்பட்டால் பேசி சரி செய்து கொள்வோம். எங்களைப் பொருத்தவரை கவுரவமான வகையில் சீட்களைஎதிர்பார்க்கிறோம் என்றார் மணி.












Click it and Unblock the Notifications