ஸ்டாலின் கைது: சேலத்தில் 6 அரசு பஸ் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக துணை பொது செயலாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினர்ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பு என்று சமீபத்தில்உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவும், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜும் பதவி விலகவேண்டும் என்று கோரி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பு இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட பரிதி இளம் வழுதி, ஆற்காடு வீராசாமி மற்றும் 1000க்கும் மேற்பட்டதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி எதிரொலியை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து சேலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் 6 அரசு பஸ்களை திமுக ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். மேலும்சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியிலும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications