ஜெயா டிவி வழக்கு: 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயா டிவிக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் வழங்குவது குறித்து ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயா டிவி நிறுவனம் தற்போது வி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதனால்நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயாரித்து அளிக்க வேண்டும். இதனால் ஏற்படும் கால தாமதம் மற்றும் பண விரயத்தைத்தவிர்ப்பதற்காக நேரடியாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கொள்ளும் டெலிபோர்ட் வசதியை ஜெயா டிவி நிறுவனம்ஏற்படுத்தியது.

இந்த டெலிபோர்ட் வசதியை பயன்படுத்திக் கொள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையிடம் ஜெயா டிவி நிறுவனம்விண்ணப்பித்தது. ஆனால் இதுவரை உரிமம் வழங்கப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதையடுத்து ஜெயா டிவிநிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து ஜெயா டிவியின் விண்ணப்பத்தை விரைவில் பரிசீலித்து நடவடிக்கைஎடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜெயா டிவி நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது.

அந்த மனுவில், உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைக்கு தீர்ப்பில் காலக்கெடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால்மேலும் தாமதம் ஏற்பட்டு பேரிழப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர், ஜெயா டிவி நிறுவனம் மீது திமுகஎம்.பி. செ.குப்புசாமி கொடுத்துள்ள புகார் ஒன்று கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்திடம் உள்ளது.

அந்த மனு தொடர்பான அனைத்தையும் 4 வாரங்களுக்குள் தகவல் ஒலிபரப்புத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் 2 வாரங்களுக்குள் ஜெயா டிவி விண்ணப்பம் மீது தகவல் ஒலிபரப்புத் துறை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஜெயா டிவி நிறுவனம் ஜெயா பிளஸ் என்ற செய்தி அலைவரிசையை ஒளிபரப்புவதற்கான அனுமதியை ஏற்கனவேபெற்றுள்ளது.இருப்பினும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்காததன் காரணமாக செய்தி அலைவரிசையைஒளிபரப்ப முடியாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+