போலீஸ் பாதுகாப்பு தேவை: முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வீரப்பன் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி கோரியுள்ளார்.

வீரப்பனுக்கு சயனைட் விஷம் வைத்து அதிரடிப்பபடையினர் கொன்று விட்டதாக புதிய புகாரை எழுப்பியுள்ளார் முத்துலட்சுமி.இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தையும் அவர் அணுகியுள்ளார்.

இந்த நிலையில் மேட்டூரில் முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவருக்கு அதிரடிப்படையினர் விஷம்வைத்துக் கொன்று விட்டனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். பூசாரி மணி,அம்மாசி ஆகியோர் தான் வீரப்பனை ஏமாற்றி அவருக்கு சயனைட் கலந்த உணவைக் கொடுத்து கொன்றுள்ளனர்.

அவர்களது வாயாலேயே இதை வாக்குமூலமாக அளித்துள்ளனர். அதை வீடியோவில் பதிவு செய்துள்ளோம். இந்த ஆதாரத்தின்மூலம் அதிரடிப்படையினரின் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எனது கணவரின் உடலை மீண்டும் எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். சிபிஐவிசாரணைக்கு இதை உத்தரவிட வேண்டும். அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்திருப்பதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே வீரப்பன் மரணம்தொடர்பான உண்மைகள் வெளியாகும் வரை, வழக்குகள் முடியும் வரை எனக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அப்போது தான் நானும் மற்றவர்களும் பயமின்றி உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்றார் முத்துலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+