தொகுதிப் பங்கீடு: மார்க்சிஸ்ட் அதிருப்தி
மதுரை:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை என்று தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணியில் ரகசியமான முறையில் கூட்டணிக் கட்சிகளுடன்திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. ஆளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஒரு அவுட்லைன் போட்டுக்கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது.இதுதொடர்பாக தொடர்ந்து பேசி இறுதி வடிவம் கொடுக்க திமுக தலைமை முயன்று வருகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாகமதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது. இந்தக் கட்சிகள் கேட்கும்தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வருமா என்ற கேள்விக்குறியே இதற்குக் காரணம்.
கவுரவமான வகையில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாமக, மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்மறைமுகமாகவும்,நேரடியாகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும்,சிறப்பாகவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்கள் என்று செய்திகள் வருகின்றன. இது நன்றாகவா உள்ளது? தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் உணர்வுகள் புண்படாதா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை விட கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறது. எத்தனை தொகுதிகளை கேட்பது என்பதுஉள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து வருகிற 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதித்துமுடிவெடுக்கவுள்ளோம் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டுள்ள முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்வரதராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications