டி.விகளால் கலாச்சாரம் சீரழிகிறது: வைகோ
சென்னை:
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிப்பதாக அமைந்துள்ளது. எனவேடிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிருங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பள்ளித் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில், நான் எட்டுவயதிலேயே மேடைப் பேச்சில் இறங்கி விட்டேன். அந்த ஆற்றலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எனக்குள்ஊட்டியது எனது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களை நாம் பெற்றோர் போல மதிக்க வேண்டும்.அம்மா, அப்பாவுக்கு கீழ்படிவதைப் போல, மதிப்பதைப் போல ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை போதிப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். பள்ளிக் கூடங்களில் சாதி, மதஉணர்வுகள் அறவே கூடாது.
சில மாணவர்கள் தேர்தவில் சைபர் மதிப்பெண் எடுத்து விட்டால் பெற்றோர் திட்டுவார்கள், கோபித்துக் கொள்வார்கள், அடிக்கக்கூடச் செய்வார்கள். சைபர் இல்லாவிட்டால் கணக்கு ஏது? சைபர் தான் கணக்குப் பாடத்திற்கு அடித்தளம்.
எனவே பிள்ளைகள் மதிப்பெண் சரியாக எடுக்காவிட்டால் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். மாறாக அவர்களைஊக்கப்படுத்துங்கள், அடுத்தமுறை நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க ஆதரவாக இருங்கள்.
மாணவர்கள் டிவி அதிகம் பார்க்கிறார்கள் என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. டிவி பார்ப்பதில் தவறில்லை. ஆனால்அதிலேயே மூழ்கிப் போய் விடாதீர்கள். இன்று வரும் டிவி நிகழ்ச்சிகள் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிப்பதாகஅமைந்துள்ளன.
எனவே அது மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் நல்ல நிகழ்ச்சிகளாக தேர்வு செய்து பாருங்கள்.
உங்களில் ஒரு அன்னை தெரசா இருக்கலாம், நல்ல விஞ்ஞானி இருக்கலாம், படைத்தளபதிகள் இருக்கலாம், மனித நேயம் மிக்கதலைவர்கள் இருக்கலாம். அவற்றை உணர்ந்து நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறினார் வைகோ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications