ராகுல் போட்ட ஸ்கெட்ச்.. ஒரு பிறந்த நாள் மெசேஜ்.. அடுத்த நொடி பிரதமர் இல்லம் முற்றுகை. என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். பிரதமர் இல்லம் முன்பு எதிர்க்கட்சியினர் இதுபோல போராட்டம் நடத்தியதை டெல்லி போலீசார் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் இந்த போராட்டத்தை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் புதிய அரசியல் திருப்பத்தை எட்டியுள்ளது. சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி தலைமையிலான போராட்டம் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற நிலையில், நேற்று அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே திடீர் தர்ணா நடத்தி மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் அழுத்தம் கொடுத்தது.

Narendra Modi Rahul Gandhi neet

காங்கிரஸ் முடிவு

ஏற்கனவே ராகுல் காந்தி, கோட்டா மற்றும் டேராடூனில் மாணவர்களைச் சந்தித்து தேர்வுத்தாள் லீக் பிரச்சினையை எழுப்பியிருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸின் பங்கு மறைந்து போகக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்துள்ளது. அதேநேரம் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நேரடியாக சென்ரால் அது பின்னாட்களில் தங்களுக்கு எதிராக மாறலாம் என்றும் காங்கிரஸ் கருதியுள்ளது. அன்னா ஹசாரே போராட்டத்தின் போது செய்த தவறை மீண்டும் செய்ய காங்கிரஸ் ரெடியாக இல்லை.

பிறந்த நாள் மெசேஜ்

இதனால் தான் நேரடியாக போராட்ட களத்தில் குதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக மிகவும் ரகசியமான ஒரு திட்டத்தை காங்கிரஸ் போட்டது. அதாவது நேற்று ஜூன் 21ம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே பிறந்த நாள். பிற்பகல் 3 மணியளவில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் ஒரு மெசேஜ் போய் இருக்கிறது. அதாவது மல்லிகார்ஜுன் கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லமான 10, ராஜாஜி மார்க் வருமாறு அனைத்து எம்பிக்களுக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் மெசேஜ் அனுப்பினார். பெரும்பாலான எம்.பி.க்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவே அழைக்கப்பட்டதாக நினைத்து அங்கு சென்றனர்.

ஆனால் கார்கே இல்லத்துக்கு வந்த பிறகுதான், அங்கிருந்து பிரதமர் மோடியின் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று தர்ணா நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டது. கார்கே இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியின் இல்லம் வெறும் 2 கிமீ மட்டுமே. எனவே, அங்கிருந்து நடந்தே சென்றுவிட்டனராம். போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் கசிந்துவிடாமல் இருக்கவே இப்படி திட்டம் போட்டு செயல்படுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் இல்லம்

பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்ய வரும்போது எளிதில் இழுத்து செல்ல முடியாத வகையில், தங்களது கைகளை ஜிப் டை மூலம் கட்டிக்கொள்ளும்படி கூறி ராகுல் காந்தியே நேரடியாக அந்த ஜிப் டையையும் கொடுத்தார்.

போராட்டத்திற்கு முன்பு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காயமடைந்த மாணவர்களை நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மறுபுறம், காங்கிரஸ் சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு சட்ட உதவி வழங்க காங்கிரஸ் சட்ட அணியும் களமிறக்கப்பட்டது.

ஆம் ஆத்மி

இருப்பினும், காங்கிரஸ் செயல்பாடுகளை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், "கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தை திசைதிருப்பவே ராகுல் காந்திக்கு தனது இல்லம் முன்பு போராட்டம் நடத்த பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்" என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டினார்.

இது ஒரு பக்கம் இருக்க மத்திய அரசு சார்பில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் நீட் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்ததாக மத்திய அரசு கூறியது. ஆனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+