இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? இந்த ஒரு பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழைப்பழம் பற்றின சந்தேகம் எப்போதுமே பலருக்கும் தீர்வதில்லை.. இரவு உணவை முடித்ததும் பழங்களை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக, வாழைப்பழம் என்பது நம்மில் தவிர்க்க முடியாத பழமாகும்.. ஆனால், இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு உண்மையிலேயே நன்மையா அல்லது ஆபத்தா? எந்தெந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்? இது தொடர்பாக டாக்டர்கள் அளிக்கும் முக்கியமான விளக்கங்களை இங்கு சுருக்கமாக காண்போம்.

அனைத்து வயதினருக்குமே ஏற்ற பழம் இந்த வாழைப்பழம்தான், பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Health Benefits

வாழைப்பழம் நன்மைகள்

நைட் நேரத்தில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைத் தளர்ச்சியை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்திற்கு துணையாக இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இருந்தாலும் இரவு நேரங்களில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது சில நடைமுறைச் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இரவு நேரத்தில், குறிப்பாக சாப்பிட்டஉடனே படுக்கைக்கு செல்லும்போது, சிலருக்கு செரிமான அசௌகரியங்கள் ஏற்படலாம். காரணம், வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், இரவில் இதனை சாப்பிட்டுவிட்டு உடனே படுக்கைக்கு செல்லும்போது சிலருக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற அசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சைனஸ் பிரச்சனை

அதேபோல, சளி, இருமல் அல்லது சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவில் ஜில்லென்றுள்ள பழங்களை சாப்பிடும்போது, அது சிலருக்கு தொண்டை தொந்தரவை அதிகரிக்கக்கூடும். இது எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதிப்பை தராது என்றாலும், உடல்நிலை உணர்திறன் கொண்டவர்கள் இரவு நேரத்தைத் தவிர்ப்பது சிறந்தது.

அதேபோல சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், பழத்தின் அளவு, அது எந்த அளவுக்கு பழுத்திருக்கிறது மற்றும் அன்றைய நாளின் மொத்த உணவுமுறை ஆகியவற்றைப் பொறுத்தே ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இரவில் சாப்பிடும்போது அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

எப்போது வாழைப்பழம் சாப்பிடலாம்

அப்படியானால் வாழைப்பழத்தை எப்போது சாப்பிடுவது சிறந்தது? மாலை நேரத்திலோ அல்லது காலையிலோ சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்க உதவும். இரவு நேரத்தில் சாப்பிடுவதாக இருந்தால், படுப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிடுவது செரிமானச் சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+