ஜெயலலிதாவையும் சந்திப்பேன்: கார்த்திக்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர் கொடுத்தால் அவரையும் சந்தித்துப் பேசுவேன் என்று அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.அவருடன் நடிகர் கார்த்திக்கும் சென்றிருந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்கார்த்திக் கருணாநிதியை சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியது.யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் கார்த்திக் குழம்பியிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சந்தானம் எம்.எல்.ஏ. பேசி வருகிறார், பேட்டி கொடுக்கிறார்.
அகில இந்தியத் தலைவரான பிஸ்வாஸ் யாரையும் சந்திப்பார், அவரை விமர்சிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. கட்சிக்குள்பிரச்சினை என்றால் அதை கட்சிக்குள்ளேயே கூறி விவாதிக்க வேண்டும். அதை விடுத்து பேட்டி கொடுப்பது, செய்திவெளியிடுவதை அனுமதிக்க முடியாது.
கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் சந்தானம் செயல்படுகிறார். ஆனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிரிவுகள் 90 சதவீதம்இணைந்து விட்டன. எனவே சந்தானத்தின் முயற்சி பலிக்காது. தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பதுஎன்பது குறித்து கொல்கத்தாவில் வருகிற 10ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மத்திய குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
அப்போது அதுகுறித்து முடிவு செய்யப்படும். மூத்த தலைவர்கள் விரும்பினால் தான் நான் போட்டியிடுவேன். பார்வர்ட் பிளாக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
பார்வர்ட் பிளாக் மாநிலத் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகிறேன். இதற்காக நேரம்ஒதுக்குமாறு அவருக்கு கோரியுள்ளேன். சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவரை சந்திப்பேன். ஜெயலலிதாவை நான் சந்திப்பதுஏன் என்பதை கட்சியின் மத்தியக் குழுவிடம் விளக்குவேன். மற்றவர்களுக்கு அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லைஎன்றார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications