நெடுமாறன் மீதான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகள் குறித்து புத்தகம் எழுதியதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நிெடுமாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழீழம் சிவக்கிறது என்ற தலைப்பில் நெடுமாறன் ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகத்தை தமிழ் முழக்கம் என்ற பதிப்பகத்தின் சார்பில், சாகுல் ஹமீது வெளியிட்டிருந்தார்.இந் நிலையில் இப்புத்தகம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது என்று கூறி நெடுமாறன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதற்குப்பதில் வரும் 16ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி செல்வக்குமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications