பிரியா நாயர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக புகார் கொடுத்துள்ளதயாரிப்பாளர் பிரியா நாயர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

Priya Nairசுதாகரன் தன்னிடம் போனில் ஆபாசமாக பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம்புகார் கொடுத்தார் பிரியா நாயர். இது தொடர்பாக ஆடியோ கேசட்டில் சுதாகரன் பேசியதை பதிவு செய்து வைத்திருப்பதாகவும்அவர் கூறியிருந்தார். ஆனால் இந்தப் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் பிரிய நாயர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரியா நாயர் தன்னிடம்வைத்துள்ள ஆடியோ கேசட் ஆதாரம் உள்ளிட்டவற்றை காவல் துறையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரியா நாயர் மீது காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்குஉத்தரவிடக் கோரி செங்கோட்டையன் என்ற திரைப்பட பைனான்சியர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதுதொடர்பாக செங்கோட்டையன் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி பிரியாநாயர் ரூ. 1 லட்சம் வாங்கினார். ஆனால் விஜய்யின் கால்ஷீட்டையும் வாங்கித் தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. பணத்தைக் கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார்.

இது தொடர்பாக வடபழனி உதவி ஆணையரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேபிரியா நாயர் மீது நான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+