பாமகவின் புதிய நாளிதழ் தமிழோசை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் திமுகவை வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்கூறியுள்ளார். அவரது கருத்தை புறந்தள்ளி விட முடியாது. விரைவில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது தான்பாமகவின் கருத்தும் ஆகும்.

கூட்டணிக் கட்சிகளுக்கு திருப்தியான வகையில் தொகுதிப் பங்கீட்டை திமுக தலைவர் கருணாநிதி முடிப்பார் என்ற நம்பிக்கைஎனக்கு உண்டு. விரைவில் பேச்சு வார்த்தையை கலைஞர் தொடங்குவார் என நம்புகிறேன். வருகிற தேர்தலில் 234தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்.

திருமாவளவனை கூட்டணியில் சேர்க்க தீவிரமாக முயற்சித்து வருகிறேன். முயற்சி பலிக்கும் என நம்புகிறேன். திண்டிவனம்ராமமூர்த்தியாலோ அல்லது வேறு யாராலுமோ பாமகவுக்கு எக்காலத்திலும் பாதிப்பு ஏற்படாது.

பாமக சார்பில் விரைவில் நாளிதழ் வெளியாகும். தமிழோசை என்று அதற்குப் பெயர் வைத்துள்ளோம். இது பாமக சார்பில்வெளியாகும் இதழ் என்றாலும் கூட நடுநிலையுடன் வெளியாகும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+