சாலைப் பணியாளர்களுக்கு நிவாரணம்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலையை இழந்த கொடுமையால் மரணமடைந்த 70க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசுஉரிய நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர்ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சாலைப் பணியாளர்களை இத்தனை காலம் வேலைநீக்கம் செய்து விட்டுஇப்போது தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் வேலையில் சேர்த்துள்ளதால் எந்தப் பலனும் அவர்களுக்கு ஏற்படப் போவதில்லை.வேலையிழந்த விரக்தியாலும், குடும்ப வறுமையாலும் உயிரிழந்த 70க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களின் குடும்பங்கள்இன்னும் வறுமையிலும், இழந்த துயரத்திலும் வாடி வருகின்றன. அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையைவழங்க வேண்டும்.
மேலும் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கான சம்பளம் மற்றும் பிற சலுகைகளையும் சாலைப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டும். அப்போது தான் முழுமையான நிவாரணத்தை அவர்களுக்கு கொடுத்ததாக ஆகும் என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications