குற்றபத்திரிக்கைக்கு தடை கோரும் ஆற்காடு மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கக் கோரி முன்னாள் அமைச்சரும், திமுகபொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 5.42 கோடி அளவுக்கு சொத்துசேர்த்ததாக கூறி ஆற்காடு வீராசாமி, அவரது தம்பி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆற்காடு வீராசாமியின் தம்பிதேவராஜ் மனுஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+