முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் கருணாநிதி
சென்னை:
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,சீக்கிய தலித்துகளுக்கும், புத்தமத தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதைப் போல முஸ்லீம்களுக்கும், தலித்கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், இத்தகைய இட ஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலஅரசுகளுக்கே வழங்குவதற்கும்;
சிறுபான்மையினராக உள்ள முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற வகையில், அரசியல்சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் வகையில் சட்ட திருத்தங்கள் அமைந்திட வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடராஜன்- முஸ்லீம் அமைப்பு பிரமுகர்கள் சந்திப்பு?:
இதற்கிடையே கடந்த வாரத்தில் தமிழகத்தின் மிக முக்கிய இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இருவரைசசிகலாவின் கணவர் நடராஜன் தனது சென்னை இல்லத்திற்கு அழைத்துப் பேசியுள்ளார்.
அப்போது முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு கமிட்டி அமைக்க முதல்வர் ஜெயலலிதா தயாராகஇருப்பதாகவும் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் இருவரும் உடன் இருந்ததாகவும் தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கும் போயஸ் கார்டனுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை என்று வீட்டில் போர்ட் மாட்டி வைத்திருப்பவர்நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கூட்டணி தொடர்பாகவும், அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும்முயற்சிகளிலும் நடராஜன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இட ஒதுக்கீடு விஷயத்தில் வெறும் பேச்சை ரொம்ப நாட்களுக்கு கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டஅந்த இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள், திட்டவட்டமாக அரசு எதையாவது செய்தால் மட்டுமே அதிமுகவை ஆதரிப்போம்என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டனர்.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் அந்த முக்கிய பிரமுகர்களை திமுக தலைவர் கருணாநிதியும் அழைத்துப் பேசியதாகவும், அப்போது முஸ்லீம்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மூலமாக திமுக நிச்சயம் செய்யும் என கருணாநிதிஉறுதியளித்ததாகவும், இதையடுத்து திமுகவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக, நடராஜனின் பிகைன்ட் த ஸ்கிரீன் முயற்சிகளை அடுத்தே அந்தப் பிரமுகர்களை கருணாநிதி அழைத்துப் பேசி இடஒதுக்கீடு குறித்து பிரதமருக்கு அவரசமாய் கடிதம் அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.
இந்த முக்கிய முஸ்லீம் அமைப்பின் ஆதரவு திமுகவுக்குப் போய்விட்டதால் வெறுத்துப் போன அதிமுக தலைமை வேறு இஸ்லாமியஅமைப்புகளை தனக்கு ஆதரவாகத் திரட்ட உளவுத்துறைக்கும் அமைச்சர்கள் சிலருக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இன்று சென்னை மைலாப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் 8 சிறிய இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றன. இடஒதுக்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவது என்றும், அவர் ஆதரவு தந்தால் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதுஎன்றும் முடிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications