சுதாகரன் செக்ஸ் டார்ச்சர்: கொலை மிரட்டல்?- ப்ரியா நாயர் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Priya Nairமுதல்வர் ஜெயலிலதாவின் மாஜி வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்காள் மகனும், சிவாஜி குடும்பத்து மருமகனுமான சின்னஎம்ஜிஆர் சுதாகரனால் செக்ஸ்ரீதியில் டார்ச்சர் செய்யப்பட்ட பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ப்ரியா நாயர் தற்கொலைக்குமுயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுதாகரன் தன்னிடம் போனில் ஆபாசமாகப் பேசுவதாக புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரியா. மேலும் போனில்தினமும் இரவில் தன்னை அங்கம் அங்கமான வர்ணித்து மாஜி வளர்ப்பு மகன் பேசியதை அப்படியே டேப்பும் செய்தார் ப்ரியா.

இந்த டார்ச்சர் தொடர்பாக ப்ரியா கொடுத்த புகார் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில்,உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். ப்ரியா நாயரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சுதாகரனுக்கு எதிராக உள்ள அனைத்துஆதாரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க ப்ரியா நாயருக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை நடேசன் நகரில் உள்ள தனது வீட்டில் ப்ரியா நாயர் தனியேஇருந்தபோது அங்கு வந்த 3 ஆசாமிகள் வீட்டின் வெளியில் நின்றபடி ப்ரியாவை தகாத முறையில் திட்டியுள்ளனர்.

டேப் ஆதாரங்களை போலீசிடம் தந்தால் உன்னையும் குடும்பத்தையும் கொலை செய்வோம் என ப்ரியாவை அக்கும்பல் வீடு புகுந்து வந்து மிரட்டிச் சென்றுள்ளது.

இதையடுத்து ப்ரியா நாயர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட அவரை,ப்ரியாவின் கணவர் சென்னை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சித்தது தொடர்பாக ப்ரியா மீது புதிதாக வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.

மோசடிப் புகார்:

இதற்கிடையே நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 லட்சம் பணத்தை ப்ரியா நாயர் மோசடி செய்து விட்டதாக அவர்மீது வெங்கடேஷ் என்ற வாலிபர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் சென்னைக்கு பட வாய்ப்பு தேடி வந்தபோது சத்தியமூர்த்தி என்பவர் மலையாளி ப்ரியாஎனப்படும் ப்ரியா நாயரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்தால் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ப்ரியா கூறவே நானும் பணத்தைக் கொடுத்தேன்.இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 28ம் தேதி என்னை அழைத்த ப்ரியா, தனக்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அவரதுபடத்தில் 2வது ஹீரோவாக என்னை நடிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் ப்ரியா நாயரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், பத்திரிக்கைகளில் ப்ரியா நாயர் குறித்து பல்வேறுசெய்திகள் (மாஜி வளர்ப்பின் செக்ஸ் டார்ச்சன் குறித்தவை) வெளியாகத் தொடங்கியதால் சந்தேகமடைந்த நான் ப்ரியாவைத்தொடர்பு கொண்டு எனது பணத்தைத் திருப்பிக் கேட்டேன்.

Sudhakaranஅதற்கு ஒரு முகவரியைக் கூறி அங்கு போய்ப் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றார்.

இதையடுத்து அங்கு சென்றபோது, என்னை அறிமுகப்படுத்திய சத்தியமூர்த்தி உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள் என்னைமிரட்டி, அடித்தனர். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பி வந்து விட்டேன்.

ப்ரியா நாயரிடம் நான் கொடுத்த ரூ. இரண்டரை லட்சம் ரூபாயை வாங்கித் தர வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்வெங்கடேஷ்.

செக்ஸ் டார்ச்சர் தந்த சுதாகரனை மிரட்டியதால் தன் மீதே புகார்கள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்துஏற்பட்டால் அதற்கு சுதாகரனே பொறுப்பு என்றும் ப்ரியா நாயர் முன்பு பேட்டியளித்தது நினைவுகூறத்தக்கது.

ஆனால், வெங்கடேஷ் கொடுத்துள்ள புகாரின் பின்னணியில் சுதாகரன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அதை போலீசார்தான் விசாரிக்க வேண்டும்.

போலீசிடம் டேப் ஆதாரம்:

இதற்கிடையே ப்ரியா நாயரிடம் சுதாகரன் இரவில் போன் மூலம் ஆபாசமாக பேசிய பேச்சு அடங்கிய டேப் ஆதாரங்களைப்ரியாவின் கணவர் சத்யா துணை கமிஷ்னர் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தார்.

தன் குரலைப் போலவே யாராவது ப்ரியாவிடம் மிமிக்ரி செய்திருக்கலாம் என இப்போதே சுதாகரன் பீலா விடஆரம்பித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+