கராத்தே பதவியைப் பறிக்க காங். கோரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திற்கு தொடர்ந்து 3 முறை வராமல் இருக்கும் துணை மேயர் கராத்தே தியாகராஜனின்கவுன்சிலர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசால் கடந்த ஆண்டுகொண்டு வரப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டத் திருத்தத்தின் 53வது பிரிவின்படி, ஒரு உறுப்பினர் தொடர்ச்சியாக 3கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தால் உறுப்பினர் பதவியில் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார் எனக்கூறப்பட்டுள்ளது.மேலும் சென்னை மாநகர நகராட்சி சட்டம் 1919ல் 29வது விதியில் உள்ள 3வது உட்பிரிவின்படி, உறுப்பினர் பதவியை இழக்கும்துணை மேயர், அந்தப் பதவியையும் தானாக இழந்து விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது பணியை ஆற்றாமலும், கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டும், 2005 நிவம்பர் 21, 2006 பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று நாட்கள் நடந்த சாதாரண மன்றக்கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்து கொள்ளாமல் உள்ளார்.
எனவே மேற்கண்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கவுன்சிலர் மற்றும் துணை மேயர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய துணை மேயரை தேர்ந்தெடுக்க வேண்டிய கடமையை தாங்கள் ஆற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications