யாருடன் கூட்டணி?: மார்ச் 6ல் பாஜக முடிவு
சென்னை:
தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் மார்ச் 6ம் தேதி நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில்முடிவெடுக்கப்படும் என பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் நாயுடு கூறியதாவது:நபிகள் நாயகத்திதை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் நாட்டு கார்ட்டூனிஸ்டின் தலையைக்கொண்டு வருபவர்களுக்கு ரூ. 51 கோடி சன்மானம் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர்அறிவித்துள்ளார்.
இது கிரிமினல் செயலாகும். அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் அவரை கைதுசெய்ய வேண்டும்.
ராணுவத்தில் எத்தனை முஸ்லீம்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு நடத்தி வரும் கணக்கெடுப்பு நாட்டுக்குமிகவும் ஆபத்தானது. முஸ்லீம் ஓட்டுக்காக காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்வதை பாஜக அனுமதிக்காது.
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை.அதே நேரத்தில் வரும் 6ம் தேதி சென்னையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
அதில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரதாப் ரூடியும் கலந்து கொள்கிறார். அப்போது எந்தக் கட்சியுடன்கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
வைகோவுக்கும் கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. அடுத்து என்ன நடக்கும்என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார் நாயுடு.
தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அத்வானி ஆதரவு மாநில பாஜக தலைகள் கோரிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications