தொகுதிப் பட்டியல் கேட்டது ஏன்?: கருணாநிதி
சென்னை:
சுமூகமாக தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் தான் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி விவரப்பட்டியல் கோரப்பட்டது என திமுக தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார்.
திமுக கூட்டணிக் கட்சிகள் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை 15ம் தேதிக்குள் தருமாறு திமுக தலைவர்கருணாநிதி கோரியிருந்தார். அவரது அழைப்பை ஏற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாமக ஆகியவைபட்டியலை வழங்கியுள்ளன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓரிரு நாளில் பட்டியல் தருவதாக சொல்லியுள்ளன.ஆனால், மதிமுக இதுவரை பட்டியல் குறித்து பேசவே இல்லை.இதனால் அக் கட்சி கூட்டணியில் நீடிப்பது கஷ்டம் என்றே தெரிகிறது.
இந் நிலையில் தொகுதி விவரப் பட்டியலை தான் கோரியது ஏன் என்பது தொடர்பாக கருணாநிதி விளக்கம்அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 15ம் தேதிக்குள் திமுக கூட்டணியில்இருக்கின்ற கட்சிகள் தாங்கள் விரும்புகின்ற தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டணிக் கட்சித் தலைவரிடம்கொடுத்து விட வேண்டும் என்று பிப்ரவரி 8ம் தேதி நடந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது.
இதை, சில கட்சிகளை வெளியேற்றும் உள் நோக்கத்துடன் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிலர் எழுதுகிறார்கள்.
ஆனால், 8ம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி நடந்தால்தான், யாருக்கு எத்தனை இடம் என்பதை முறையாகப்பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி இன்னொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு,அதனால் பிறகு பிரச்சினை ஏற்படாமல் முன்கூட்டியே தெரிந்து கொண்டு சுமூகமான முறையில் அந்தத் தொகுதியைபகிர்ந்து கொள்ள இயலும். அந்த நல்ல எண்ணத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கருணாநிதிகூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications