புலிகள்-அரசு இடையே மீண்டும் பேச்சு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா:

Anton Balasingh addressing to the reporters
நிருபர்களை சந்திக்கும் ஆண்டன் பாலசிங்கம்

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்துநாட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.

ஜெனீவாவில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள செலினி என்ற இடத்தில் சட்டாவ் டி போஸ்ஸே என்றவிடுதியில் இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

நார்வே மற்றும் சுவிஸ் நாட்டின் மத்தியஸ்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. பேச்சுவார்த்தையில்புலிகள் தரப்பில் அதன் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன், தமிழ் ஈழகாவல்துறையின் தலைவர் நடேசன், கலோனல் ஜெயம், மார்ஷல் இளந்திரையன் என்ற ராசையா புனித ரூபன்,பாலசிங்கத்தின் மனைவி அடேலி பாலசிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பாலசிங்கமும் அவரது மனைவியும் லண்டனில் இருந்து ஜெனீவா வந்தனர். மற்றவர்கள் கிளிநொச்சியில்இருந்து கொழும்பு வழியாக ஜெனீவா வந்து சேர்ந்தனர். அவர்களை சுவிஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர்ஜெனீவா சர்வேதச விமான நிலைய மததிய அரங்கில் ஆண்டன் பாலசிங்கமும் குழுவினரும் நிருபர்களைசந்தித்தனர்.

இலங்கை அரசின் சார்பில் நலத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டி சில்வா, அமைச்சர்கள் ஜெயராஜ்பெர்னாண்டோபுல்லே, ரோகிதா பொகலகாமா, திருமதி பெரியல் அஷ்ரப் (முஸ்லீம்கள் பிரதிநிதியாக), காவல்துறைஇன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, டாக்டர் பலிதா கோஹோனா, கோமின் தயாசிரி ஆகியோர்பங்கேற்றனர்.

Srilankan Ministers
இலங்கை அமைச்சர்கள் குழு

2003ம் ஆண்டு ஏப்ரலில் பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர் இப்போது தான் மீண்டும் பேச்சுவார்த்தைகள்தொடங்கியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மீண்டும் முழுமையாக அமல்படுத்தி,இலங்கையில் மீண்டும் போர் வெடிப்பதைத் தடுப்பதே இப்போதையே பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாகஇருக்கப் போகிறது.

இலங்கை குழுவுக்கு உதவ அமைச்சர் சிரிபசி சூரியார்ச்சி, கடற்படை துணை அட்மிரல் வசந்தா கரன்னகோடா,ராணுவ, பொருளாதாரப் பிரிவு அதிகாரிகள், இலங்கைக்கான சுவிஸ் தூதர் சரளா பெர்னாண்டோ ஆகியோரும்ஜெனீவா வந்துள்ளனர்.

பேச்சுவார்த்தையின் துவக்கத்தில் ஆண்டன் பாலசிங்கம் பேசுகையில்,

LTTE team at Geneva Airport
ஜெனீவா விமான நிலையத்தில் புலிகள் குழு

நார்வே உதவியுடனான அமைதி முயற்சிகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சி, போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம்கையெழுத்தானது தான். சரியாக 4 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் தான் அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.இதனால் உயிரிழப்பும் பொருளிப்புகளும் முடிவுக்கு வந்தன. ஆனால், அந்த அமைதி ஒப்பந்தம் கடும் சவால்களைசந்தித்தது. அதிலும் 2005ம் ஆண்டின் கடைசி காலத்தில் ஒப்பந்தம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது.

ஆனாலும் அந்த ஒப்பந்தத்தால் தான் மீண்டும் போர் வெடிக்காமல் தவிர்க்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் சிலர்சொல்வது போல அவசரமாகவோ, யாருக்கும் சாதகமாகவோ உருவாக்கப்படவில்லை. மிக நுணுக்கமானவிஷயங்களை எல்லாம் உள்ளடக்கி நார்வே உதவியால் உருவாக்கப்பட்டது.

போரைத் தவிர்க்க உதவிய அந்த ஒப்பந்தத்தை நாம் முழுமையாக மதித்து நடக்க வேண்டும். அமைதிப்பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையே அந்த ஒப்பந்தம் தான் என்று நாங்கள் கருதுகிறோம். இதனால் அந்தஒப்பந்தத்தை நாம் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

நார்வே சர்வதே வளர்ச்சித்துறை அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலைமையிலான குழு தான் புலிகள், இலங்கைஅரசுடன் பல சுற்றுப் பேச்சு நடத்தி இந்த பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தையைஆசிய நாட்டில் நடத்த வேண்டும் என்று அரசும், ஐரோப்பாவில் நடத்த வேண்டும் என புலிகளும் கூறியதால்இழுபறியான பேச்சுவார்த்தைகள் இப்போது புலிகளின் விருப்பப்படி ஜெனீவாவில் நடக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பத்திரிக்கைகள் இன்று மிக முக்கியமானசெய்திகள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக சுவீடனைச் சேர்ந்த உல்ப்ஹென்ரிக்சனை நார்வே நியமித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் நார்வே ராணுவஅதிகாரியான ஹக்ரூப் ஹாக்லாண்ட் இருந்து வந்தார்.

இந்தக் குழுவில் நார்வே தவிர, ஸ்வீடன், பின்லேண்ட், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாட்டுப் பிரதிநிதிகளும்உள்ளனர். புலிகள், இலங்கை அரசின் ஒப்புதலோடு உல்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+