ரூட்ட மாத்து-நாஞ்சிலிடம் சிக்கிய விஜய்காந்த்
நாகப்பட்டனம்:
திமுகவை மிகக் கடுமையாக சாடிப் பேசி வந்த மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது டாப்பிக்கை மாற்றிக் கொண்டு இப்போது விஜயகாந்த்தை வார ஆரம்பித்துள்ளார்.
மதிமுகவுக்கு கெளவரமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும், கடந்த மறை போல எங்களை ஏமாற்ற முயன்றால் நடப்பதே வேறு, ஏமாந்து போய் தனித்துப் போட்டியிடுவோம் என நினைக்க வேண்டாம், அதிமுக அணிக்குப் போய் விடுவோம், எங்களுடன் காளிமுத்து பேசி வருகிறார், ஏமாற்றுவதே கருணாநிதிக்கு பொழப்பு என்ற ரீதியில் திகவை கடுமையாக சாடி வந்தார் நாஞ்சில் சம்பத்.இவரை அடக்க முயன்று தோற்றுப் போன வைகோ, அவருடன் பேசுவைதேய நிறுத்திவிட்டார். போனில் கூட வைகோவுடன் பேச முடியாமல் திணறிப் போன நாஞ்சில் மனம் வெதும்பிப் போய் கடந்த 3 நாட்களாக அண்டர்கிரவுண்டுக்குப் போனார்
இந் நிலையில் திமுக, மதிமுக இடையே இருந்து வந்த பூசலுக்கு முற்றுப் புள்ளி வைத்த வைகோ நாஞ்சிலின் பேச்சுக்கும், எல்.கணேசனின் பேச்சுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை விட்டார்.
மேலும், நாஞ்சில் சம்பத் திமுக குறித்துப் பேசியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றும் வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நடந்த மதிமுக கூட்டத்தில் திமுகவை விட்டு விட்டு விஜயகாந்த்தைப் பிடித்துக் கொண்டு, அவரை மிகக் கடுமையாக சாடிப் பேசினார் நாஞ்சில் சம்பத்.
சம்பத் பேசுகையில், நேற்று வரை சினிமாவில் நடித்தவர்கள், சினிமா எடுத்தவர்கள், இன்று அரசியல் கட்சித் தலைவராக உலா வருகிறார்கள்.
தொடங்கி விட்ட கட்சியை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள்.
ரேஷன் அரிசி வீடு தேடி வருமாம். ரேஷன் அரிசியை வாங்கினால் வீட்டுக்குத்தான் கொண்டு வர முடியும், பின்னர் சுடுகாட்டுக்கா போகும்?
இதைக் கேட்டால் எம்.ஜி.ஆர், நான் கருப்பு எம்.ஜி.ஆர். என்று கதை விடுகிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியுமா என்ன என்றார் சம்பத்.
தனது பேச்சின் பெரும்பகுதியில் விஜயகாந்த்தை விமர்சித்த சம்பத், திமுக கூட்டணி குறித்தும் மறைமுகமாகப் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications