திமுகவில் மீண்டும் சண்டை-விஜயகாந்த் நம்பிக்கை
சேலம்:
திமுக கூட்டணியில் பிரச்சினை அடங்கியிருப்பதைப் போலத் தோன்றினாலும் மீண்டும் பெரிய அளவில் பிரச்சினை உருவாகும் என்று தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சேலம் அருகே உள்ள மல்லூர் என்ற இடத்தில் விஜயகாந்த் கூடியிருந்த திரளான தொண்டர்களிடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,நான் எம்.ஜி.ஆரை எனது குருநாதராக ஏற்றவன், காமராஜர் கொள்கையால் கவரப்பட்டவன்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ. 50,000 நிதியுதவி செய்கிறேன். அதனால் மனம் கவரப்பட்டுத்தான் எனக்கு எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்த வேனை ஜானகி அம்மாள் எனக்குக் கொடுத்தார்.
இன்று, திமுகவும், அதிமுகவும் நானா, நீயா போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் தனிக்காட்டு ராஜா போல செயல்படுகின்றன.
இந்தக் கட்சிகளுடன் பல கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன. இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு கட்சியே இல்லை என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
இது மாற வேண்டும். எம்.ஜி.ஆருக்குப் பின்னர் வேறு யாரும் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்ததில்லை. திமுகவும், அதிகவும் ஆளுக்கு ஐந்து ஆண்டுகள் என்ற ரீதியில் மாறி மாறி ஆட்சி புரிகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை நல்லாட்சி நடைபெறவில்லை. நடந்திருந்தால் நான் வந்து ஓட்டுக் கேட்க மாட்டேன்.
காமராஜர் ஆட்சி என்று பேசியவர்கள் இன்று சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தங்களது தனித்தன்மையை இழந்து கூட்டணிக் கட்சிகளை தேடிக் கொண்டு இருக்கின்றன.
இப்போதுதான் ஒரு (திமுக) கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் மீண்டும் பிரச்சினை வரும். இது உறுதி.
இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஓட்டுப் போடக் கூடாது, மாற்று ஆட்சியைக் கொடுத்தால்தான் மக்களுக்கு நல்லது. அந்த மாற்றுக் கட்சியாக தே.மு.தி.க. விளங்கும் என்றார் அவர்.
வழக்கமாக திமுக தலைவர் கருணாநிதியையும் மத்திய அமைச்சர் பாலுவையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த விஜய்காந்த் இப்போது அதைக் குறைத்துக் கொண்டு திமுக, அதிமுகவை சரி சமமாகத் தாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்காந்தின் கல்யாண மண்டபத்தை இப்போதைக்கு இடிக்கப் போவதில்லை என அவருக்கு டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியது நினைவுகூறத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications