For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணா, இபிடிபி, பிளாட், ஈபிஆர்எல்ப், ஜிகாத் குழுவிடம் ஆயுதங்களை பறிக்க புலிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

ஜெனீவா:

Geneva
பேச்சுவார்த்தை நடக்கும் சேட்டாயு டி போஸ்ஸே மாளிகை

ஒரு பக்கம் ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கம்தமிழர் பகுதிகள் மீது தாக்குதலையும் தொடுத்து வருகிறது இலங்கை ராணுவம்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்து நாட்டில் நேற்றுமீண்டும் தொடங்கியது.

இன்றும் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. புலிகள் தரப்பில் ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன்,நடேசன், கலோனல் ஜெயம், மார்ஷல் இளந்திரையன் என்ற, அடேலி பாலசிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில்பங்கேற்றுள்ளனர்.

இலங்கை அரசின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் சிரிபாலா டி சில்வா, ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே, ரோகிதாபொகலகாமா, திருமதி பெரியல் அஷ்ரப் (முஸ்லீம்கள் பிரதிநிதியாக), காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திராபெர்னாண்டோ, டாக்டர் பலிதா கோஹோனா, கோமின் தயாசிரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் பேசுகையில்,

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு அமைதி திரும்பவில்லை. பலகுழந்தைகள் பெற்றோர்களை இழந்திருகிறார்கள். அவர்களது பள்ளிகள் குண்டுவீச்சில் சிதறிப் போய்விட்டன.புலிகள் படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டும் இலங்கைக் குழுவினர் தமிழர் பகுதிகளுக்குப்போய் பார்த்தால் அங்குள்ள குழந்தைகளின் உண்மை நிலை தெரியும்.

சமீபத்தில் 5 இளம் மணவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது. பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 15 வயதுசிறுவன் இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். வீடுகளை விட்டு குழந்தைகள் ஓடும் நிலைஉருவாகியுள்ளது. இவ்வாறு வரும் குழந்தைகளை கவனித்து, அவர்களுக்கு கல்வி கொடுக்கும் வேலையில்நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

Tamilselvan speach
பேச்சுவார்த்தையில் புலிகள் குழு

இந் நிலையில் தான் எங்கள் படையில் குழந்தைகள் சேர்க்கப்படுவதாக கதை சொல்கிறது இலங்கை அரசு. நாங்கள்யூனிசெப்புடன் இணைந்து குழந்தைகள் நலனைப் பேணி வருகிறோம். எங்கள் படையில் தவறுதலாகசேர்க்கப்பட்ட சிறுவர்களையும் திருப்பி அனுப்பி வருகிறோம்.

இலங்கை ராணுவத்தின் மிரட்டல்களால் தான் இந்தக் குழந்தைகள் எங்கள் பகுதியில் தஞ்சம் அடைகின்றனர்.கருணாவின் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் இப்போது இலங்கை ராணுவத்துடன் சேர்ந்துபணியாற்றி வருவது தான் உண்மை. குழந்தைகள் நலனில் உண்மையான அக்கறை காட்டாமல், அதைஅரசியலாக்கி லாபம் அடையப் பார்ப்பது சரியல்ல.

வட கிழக்கிலும் புலிகள் அமைப்பிலும் சிறுவர்கள் குறித்துக் கவலைப்படுவதாகக் கூறிக் கொள்பவர்கள் முதலில்நாட்டின் தென் பகுதியில் நடக்கும் சிறாருக்கு எதிரான கொடுமைகள் குறித்து கவனம் செலுத்தினால் நல்லதுஎன்றார்.

முன்னதாக ஆண்டன் பாலசிங்கம் பேசுகையில்,

அமைதி ஒப்பந்தத்தால் தான் மீண்டும் போர் வெடிக்காமல் தவிர்க்கப்பட்டது. போரைத் தவிர்க்க உதவிய அந்தஒப்பந்தத்தை முழுமையாக அமலாக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையே அந்தஒப்பந்தம் தான். ஆனால், அந்த அமைதி ஒப்பந்தம் கடும் சவால்களை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டிலிருந்து வட கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்துவிட்டன. 109 தமிழர்கள்இலங்கை ராணுவத்தாலும் அதன் உதவி பெற்ற படையினராலும் (கருணா தரப்பு) கொல்லப்பட்டுள்ளன. 48தமிழர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போய்விட்டனர். இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழர்பகுதிகளில் நடந்துள்ள படுகொலைகள் குறித்த அறிக்கையை நாங்கள் இங்கே தாக்கல் செய்கிறோம்.

நாங்கள் 5,464 முறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக அரசு புள்ளி விவரம் தாக்கல் செய்துள்ளது. இதில்உண்மையில்லை. இதில் பெரும்பாலானவை படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவது குறித்தது. அந்த விவகாரம்ஊதப்படுகிற அளவுக்கு அதில் உண்மை ஏதுமில்லை.

ராணுவ உதவியுடன் செயல்படும் பாரா மிலிட்டரிப் படைகள் செய்யும் மீறல்களுக்கு புலிகள் மீது பழி போடுவதுஏற்கத்தக்கதல்ல. கருணா கும்பல், இபிடிபி, பிளாட், ஈபிஆர்எல்ப், ஜிகாத் குரூப் எனப்படும் முஸ்லீம்பாராமிலிட்டரி குழு ஆகியவை வட கிழக்கிலும் கொழும்பிலும் செயல்பட்டு வருகின்றன. இவர்களதுசெயல்களுக்கு புலிகள் மீது பழி போடுவது சரியல்ல. இவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவேண்டும்.

இலங்கை, புலிகள் குழுவுடன் நார்வே, சுவிஸ் அமைச்சர்கள்

வட கிழக்கில் இந்துக் கோவில்கள், கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அரசும், ராணுவமும் ஆக்கிரமித்துவைத்துள்ளன. 201 கோவில்கள், தேவாலயங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மக்களைபிரார்த்தனைக்க அனுமதிக்க மறுக்கிறது. 35 முக்கியமான பள்ளிகளை மூடிவிட்டு அவற்றை ராணுவம்ஆக்கிரமித்துள்ளது.

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எங்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தொண்டர்கள் நடமாடுவதிலும்பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றார்.

இந் நிலையில் நேற்று பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் மட்டக்களப்பு அருகே நாவரசன் என்ற முன்னாள்புலிகள் இயக்க வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை ராணுவ உதவி பெற்ற பாரா மிலிட்டரிப் படையினர்கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், வடமராச்சியில்உள்ள இலங்கை ராணுவ முகாமில் இருந்து ஒரு குண்டு புலிகள் பகுதியில் வந்து விழுந்து வெடித்தது.முகமலை-இட்டாவில் என்ற பகுதிகளுக்கு இடையே புலிகளின் முகாமுக்கு மிக அருகே இன்று அதிகாலை இந்தகுண்டுத் தாக்குதல் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X