கூட்டணி: கார்த்திக்குக்கு கட்சி முழு அதிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கார்த்திக்குக்கு அக்கட்சியின் செயற்குழு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவின் செயற்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. கூட்டம் நடக்கும் கடைசி நிமிடம் வரை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக, போலீஸ் ஆதரவு பெற்ற சந்தானம் தரப்பினர் கூட்டத்தில் வந்து கலாட்டா செய்யலாம் என்பதால் இந்த ரகசியம் காக்கப்பட்டது.

கட்சித் தலைவரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளருமான கார்த்திக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் 55 பேரும் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய டிவுகள் எடுக்கப்பட்டன.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கார்த்திக்குக்கு அதிகாரம் வழங்குவது; சந்தானம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதற்கு ஒப்புதல் வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சரணாலயம் கூட்டத்தில்..

முன்னதாக, தான் நடத்தி வரும் சரணாலயம் அமைப்பிற்காக சென்னை எண்ணூரில் துவக்கப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து கார்த்திக் பேசுகையில்,

இனி மக்கள் சேவை தான் என் வேலை. நான் என்ன செய்வேன் என்று சொல்லமாட்டேன். செய்து காட்டுவேன். மக்களை பாதுகாக்க வேலியாக இருப்பேன்.தேவைப்பட்டால் வாளும் ஏந்துவேன். கட்சியின் பொறுப்பாளராக இங்கு வந்துள்ளநான் அடுத்த முறை வேறு ரூபத்தில் (எம்எல்ஏ???) உங்களை சந்திப்பேன் என்றார்.

கார்த்திக் நடத்தும் ரகசிய பொதுக்குழு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+