டெல்லியில் வைகோ: சோனியாவை சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

கடந்தமுறை டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் தொடர்வது சந்தேகமே என்று கூறிவிட்டு வந்ததாக தகவல்கள் வந்தன.

இப்போது திமுக கூட்டணியிலேயே தொடர்வேன் என்று அறிவித்து தனது கட்சி விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துக் கொடுத்தார் வைகோ.

இந் நிலையில் டெல்லி சென்றுள்ள வைகோ, சோனியா, பிரதமருடன் கூட்டணியில் தொடர்வதைத் தெரிவிப்பார் என்று தெரிகிறது. மேலும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் சிக்கல் குறித்து சோனியாவுடன் அவர் பேசத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாமகவுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குமாறு திமுக தலைவரிடம்வலியுறுத்துமாறும் சோனியா காந்தியை அவர் கேட்டுக் கொள்வார் எனத் தெரிகிறது.

திமுக பாணியில் மாநாடு: இதற்கிடையே திமுக திருச்சியில் மாநில மாநாட்டைநடத்துவது போல, மதிமுக சார்பில் மாநில மாநாட்டை நடத்தவும் வைகோதிட்டமிட்டுள்ளார். சோர்ந்து கிடக்கும் தொண்டர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையில்இந்த மாநாட்டுக்கு வைகோ திட்டமிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் சோனியா காந்தியை கலந்து கொள்ள வைப்பது தொடர்பாகவும்தனது டெல்லி பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

40 தொகுதிகளின் பட்டியல்: இதற்கிடையே, கருணாநிதியை சமீபத்தில்சந்தித்தபோது 40 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வைகோ கொடுத்துள்ளதாககூறப்படுகிறது. அந்தத் தொகுதிகள் விவரம்:

பூவிருந்தவல்லி, திருப்போரூர், செஞ்சி,திருச்சி 1, சிவகாசி, விளாத்திகுளம்,கோவில்பட்டி, சங்கரன்கோவில், விருதுநகர், முசிறி, வேடசந்தூர், திருமங்கலம்,மதுரை கிழக்கு, சேடப்பட்டி, சாத்தான்குளம், பெருந்துரை, ஈரோடுத, திருப்பத்தூர்,புதுக்கோட்டை, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி, திருப்பூர், சிங்காநல்லூர், கோவை,கிணத்துக்கடவு, சோழவந்தான், புவனகிரி, கடலூர், வேலூர், ஸ்ரீபெரும்புதூர்,திருவள்ளூர் ஆகியவையே அந்தத் தொகுதிகள்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்காக தமிழகம்முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த வைகோ இந்த முறை சட்டசபைத்தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. விளாத்திகுளம் அல்லது சிவகாசிதொகுதியில் அவர் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோமயிரிழையில் தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம். மேலும் வரும்சட்டசபைத் தேர்தலில் தன்னோடு பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றஅனைவருக்கும் சீட் கொடுக்கவும் வைகோ திட்டமிட்டுள்ளார்.

இது அஞ்ஞானவாசம்:

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றிய மதிமுக தமிழ்மணி- நோபுள் மேரி தம்பதியினரின் மகள் அருள் அகிலா, ஜாய்சன் திருமண விழா சாத்தான்குளத்தில் நடந்தது.

திருமணத்தை வைகோ நடத்தி வைத்து வைகோ பேசுகையில்,

தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பது மதிமுக மட்டும்தான் என்று இங்கே பேசிய துணை பொதுச் செயலாளர் நாசரேத் துரை கூறினார். அது உண்மைதான்.

தொண்டர்களால்தான் நான் இன்று பிரதமரோடு பேச முடிகிறது, தேசியத் தலைவர்களோடு பேச முடிகிறது, கருணாநிதியோடு சரி நிகர் சமானமாக அமர்ந்து பேச முடிகிறது.

அத்தோடு உங்கள் உள்ளத்திலும் குடியிருக்க முடிகிறது. நான் தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுபவன்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது குறிஞ்சி மலர். மதிமுகவும் 12 ஆண்டுகளை கடந்து வந்து இன்று வலுவான நிலையில் உள்ளது.

ஒருவர் புறக்கணிக்கப்படும்போதும், ஒதுக்கப்படும்போதும், மலைத்துப் போய் விடக் கூடாது. வாழ்க்கை ஒரு போராட்டம் அதை எதிர்கொள்ள வேண்டும். அன்று மதிமுகவை புறக்கணித்தவர்கள் இன்று அழைத்துப் பேசுகின்றனர். தமிழகத்தில் மதிமுகவைச் சுற்றி செயல்பாடு நிறைந்த அரசியல் களம் அமைக்கப்பட்டுவிட்டது.

வீட்டில் பிள்ளைகள் தவறான பாதையில் செல்லும்போது அதை தட்டித் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தொண்டர்கள் வழிமாறிச் செல்ல முயலும்போது திருத்த வேண்டியது தலைவனின் கடமை. அந்த உரிமை அவனுக்கு உண்டு.

அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான், திராவிடக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் கூட. மகாபாரதத்தில் 13வது ஆண்டை அஞ்ஞானவாசம் என்பார்கள். ரொம்பக் கஷ்டமான வருடம் அது. பஞ்ச பாண்டவர்களும் மாறுவேடம் பூண்டு யார் யார் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் மறைந்து வாழ்வார்கள்.

அப்படிப்பட்ட அஞ்ஞானவாசத்தில் இப்போது மதிமுக இருக்கிறது. மிகவும் கஷ்டமான காலம் இது. ஆனால், பாண்டவர்கள் எப்படி குருஷேத்திர போருக்குத் தயார் ஆனார்களோ, அதுபோல நாமும் நம்மைத் தயார்படுத்திக் கொள்வோம். யுத்தத்தில் வெற்றி பெறுவோம்.

எதற்கும் உதவாது என்று இருந்த கல், ஒரு வீட்டின் தலைக் கல்லாகலாம். கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்போது வெற்றி பெறுவோம் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+