காவிரி பிரச்சனை தீர போகுதுங்கோ... பாஜக

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதால் காவிரி பிரச்சனை தீர்ந்துவிடும் என அக் கட்சியின்எம்எல்ஏவான லட்சுமணன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழத்துக்கு கிடைக்கவில்லை. திமுகவிரல் அசைத்தால் போதும் மத்திய அரசு கவிழ்ந்து விடும். ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தரவில்லைதிமுக முன் வரவில்லை.

இப்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது. இதனால் இனி காவிரி பிரச்சனையே இருக்காது.

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்னையில் மத்திய அரசை திமுக தட்டிக் கேட்கவில்லை.

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு எந்த கட்சியாவதுவிருப்பம் தெரிவித்தால் கூட்டணி குறித்துப் பேசுவோம். விஜயகாந்த் கட்சியுடன் நாங்கள் இதுவரைபேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.

திமுக, அதிமுக ஆட்சிகளால் தமிழகத்துக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனாலம மக்கள்தேசிய கட்சியை விரும்புகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் 75 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகும்.

புதிய வாக்காளர்கள் அனைவரும் பாஜவுக்கே ஓட்டு போடப் போகிறார்கள். இதனால் கணிசமான தொகுதிகளில்பாரஜக வெற்றி பெறும். திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றார்.

யாரை முதல்வராக முன்னிருத்தி தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, யாரையும் முன் நிறுத்தமாட்டோம் என்றார் லட்சுமணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+