ரயில்வே பட்ஜெட்: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட பேருந்துக் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் ரயில்வே பட்ஜெட்டை முதல்வர் ஜெயலலிதா குறை கூறியிருப்பது விந்தையாக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல ஊர்களுக்கு ரயில் கட்டணத்தை விட பேருந்துக் கட்டணம் அதிகமாக உள்ளது.உதாரணமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயில் கட்டணத்தை விட பேருந்துக்கு ரூ. 14 கட்டணம் அதிகமாகும். மதுரைக்கு ரூ. 28 அதிகம். நெல்லைக்கு ரூ. 50 அதிகம், சேலத்திற்கு ரூ. 45 அதிகம்.
ரயில்வே பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 50 சதவீத பயணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிதாக 11 ரயில்கள் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
33 மேம்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
இவற்றையெல்லாம் வரவேற்காவிட்டாலும் கூட, கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை என்று ஜெயலிலதா போன்ற ஒருவர் கேட்பது விந்தையாக உள்ளது என கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications