இந்திய அரசு, புலிகள் தொடர்பு-பாலசிங்கம்
லண்டன்:
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மறைமுகமான தொடர்பு இருப்பதாக புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
பிபிசி தமிழ் ரேடியோவுக்கு பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில்,ஜெனீவாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் திருப்தி அளித்தன. வட கிழக்குப் பகுதியில் அரசு,ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் துணைப் படைகளிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட்டு, அங்குவன்முறை நிறுத்தப்பட்டால் தான் தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்படும்.
இந்த விஷயத்தில் எங்களது கோரிக்கையை ஏற்று அரசு உறுதியளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ராணுவமும் அரசும் அதன் புலனாய்வுப் பிரிவினரும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும்தாக்குதல்களை நிறுத்தினால், அதற்குப் பதிலாகா தமிழர் பகுதிகளில் நடக்கும் வன்முறைகளை நிறுத்தக் கூடியஅதிகாரமும் செல்வாக்கும் புலிகளுக்கு உண்டு.
மக்கள் எழுச்சிப் படையினரோ, மற்றவர்களோ புலிகளின் ஆணையை மீறி செயல்பட மாட்டார்கள். தமிழர்பகுதிகள் அனைத்துமே புலிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டும், அவர்களது ஆதிக்கத்தின் கீழும் தான் உள்ளனஎன்பதை இது உறுதிப்படுத்துகிறது.
தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது தான் இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும். இந்தியஅரசுடன் புலிகளுக்கு மறைமுகமான தொடர்பு உள்ளது என்றார் பாலசிங்கம்.
ஆனால், அது குறித்து மேலும் விரிவாக விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
சுவிஸ்சில் தமிழர்களுடன் சந்திப்பு:
ஜெனீவாவில் இலங்கை குழுவுடன் பேச்சு நடத்திய விடுதலைப் புலிகளின் குழுவினர், அங்கு குடிபெயர்ந்துள்ளதமிழர்களுடன் ஆலோனை நடத்தினர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆயிரக்கணக்கானதமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ் இளைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.












Click it and Unblock the Notifications