இன்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி விஷயத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.

திமுக கூட்டணியில் தனக்கு 20 முதல் 23 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என கணக்குப் போட்ட வைகோ,தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க முடியாதே என்பதால் அதிக சீட்கள் தரமுன் வந்த அதிமுகவை அணுகினார்.

ஆனால், அங்கும் அதிகபட்சமாக 25 சீட் என்றே கூறப்பட்டதால் குழப்பத்தில் ஆழ்ந்தார். திமுக கூட்டணியிலேயேஇருக்கலாம் என செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் போன்ற மூத்த தலைவர்கள் கூற, அதிமுக கூட்டணிக்குப்போகலாம் என்று எல்.கணேசன், கண்ணப்பன் போன்றவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அதிமுக கூட்டணிக்கு கட்சியின் தலைவர்கள் தான் ஆதரவு தந்தார்களே தவிர தொண்டர்களிடையேஅதற்கு ஆதரவில்லை என்பதை அறிந்த வைகோ திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தார்.

தனது கட்சிக்கு காங்கிரஸ் மூலமாக திமுகவிடம் அதிக சீட்கள் பெற முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காகவேசோனியா காந்தியையும் சந்தித்தார்.

திமுக கூட்டணியில் தொடரும் வைகோவின் முடிவுக்கு எல்.கணேசனும், கண்ணப்பனும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். அவர்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளும் திமுக கூட்டணியைஎதிர்க்கின்றனர்.

இந் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளார். இக் கூட்டத்தில் வைகோ கறாராகசில விஷயங்களை எடுத்து வைத்துப் பேசுவார் என்று தெரிகிறது.

முன்னதாக கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறியபோது, கட்சியே என்னை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது, இங்கு என்னென்னவோ (வைகோ அனுமதியில்லாமல் எல்.கணேசன் அதிமுகவுடன் சைடில்பேச்சு நடத்தியது) என திமுக மூத்த தலைவரான கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனிடம் வைகோ கூறியதாகத்தெரிகிறது.

மேலும் தன்னுடன் கருணாநிதியும் தொலைபேசியில் பேச மறுப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டு வைகோபேசியதாகவும், அதன் பின்னரே கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கருணாநிதியிடம் நிலைமையைவிளக்கியதாகவும், அதைத் தொடர்ந்தே வைகோவுக்கு கருணாநிதி லைனில் கிடைத்தார் என்றும் தகவல்கள்வருகின்றன.

அப்போது இருவரும் உருக்கமாகப் பேசிய பின்னரே கூட்டணியில் தொடர்வது குறித்து வைகோவிடம் இருந்துஅறிக்கை வந்தது. இந்த பரபரப்பான சூழலில் மா.செக்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் வைகோ.

காளிமுத்துவுடன் சந்திப்பு:

தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுபமதிக்கப்பட்டுள்ளஅதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து வைகோ நலம்விசாரித்தார்.

இவர் மூலமாகவே அதிமுக-மதிமுக கூட்டணிக்கு முதல்வர் ஜெயலலிதா முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காளிமுத்துவை தான் சந்தித்தால் பிரச்சனை வரும் என்பதால் அதைத் தவிர்த்து வந்தார் வைகோ. இந் நிலையில்கருணாநிதியே அவரை சந்தித்து நலம் விசாரித்ததால், தானும் அவரைச் சந்தித்தார்.

வைகோ ஒரு மசாலா குழம்பு: டி.ஆர்

இதற்கிடையே வைகோவை மசாலாக் குழம்பு என்று விமர்சித்துள்ளார் லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.

அவர் பேசுகையில், மிளகாய், மஞ்சள், மிளகு, உட்பு இதையெல்லாம் குழப்பினாத் தான் குழம்பு. அது மாதிரிதான் வைகோவும். ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+