எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டு இல்லை: காங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழகபார்வையாளர் வீரப்ப மொய்லி கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமிக்கு வடசென்னை மாவட்டகாங்கிரஸ் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இதற்காக சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் வீரப்ப மொய்லி பேசுகையில்,

கடந்த லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் பத்து இடங்களைப் பெற்று அனைத்திலும் வெற்றி பெற்றது.அதுபோன்று தற்போது கிடைக்கும் அனைத்து இடங்களிலும் நாம் வெல்ல வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி எதைக் காட்டுகிறது என்றால் மக்கள் சக்தியை பிரதிபலிக்கும் இரண்டுபெரிய கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஜெயலலிதாவை "பூஜ்ஜியம் ஆக்க முடியும் என உறுதியாக தெரிகிறது.சட்டசபைத் தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது.

தற்போது வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை வளர்ச்சி, தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கான முதலீடு, நான்குவழிச்சாலைக்கான நிதி ஒதுக்கீடு என 17 மாதங்களில் ரூ. 75,000 கோடி தமிழகத்தில் முதலீடுசெய்யப்பட்டுள்ளது.

இது பெரிய சாதனை. இதுபோன்று வேறு எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு செய்யவில்லை.

காங்கிரஸ் அரசு தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கி கெளரவித்தது. இந்தியாவின் எந்தமாநிலத்திலும், எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.முக்கியத்துறைகள் எல்லாம் தமிழகத்திற்கு தரப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக அமைச்சர்கள் ஒழுங்காக செயல்படுகிறார்களா, திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா எனகண்காணித்து பிரதமருக்கு அறிக்கை தரும் திட்ட அமலாக்கத்துறை வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சுனாமி நிவாரணத்திற்காக ரூ. 6,000 கோடியை மத்திய அரசு அள்ளித் தந்தது. அந்தப் பணம்என்ன ஆனது?. கேட்டால் ஜெயலலிதாவிடம் பதில் இல்லை.

வெள்ள நிவாரணமாக ரூ. 1,000 கோடியை மத்திய அரசு தந்தது. அதைப் பயன்படுத்தி நல்ல காரியம்செய்தார்களா, இல்லை. கட்சிக்காரர்களுக்கும், மாடிகளில் இருப்பவர்களுக்கும்தான் நிவாரணம் தந்தனர்.அப்பாவிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவால் தான் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனால், ஆட்சிக்கு வந்த அடுத்தநாளே காங்கிரஸ் கட்சியை அழுக்கு மூட்டை என்றார் ஜெயலலிதா. அவருடன் கூட்டணி வைத்தது தவறு எனஅப்போதே உணர்ந்து விட்டோம்.

இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்றார் மொய்லி.

வாசன் பேசுகையில்,

அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டுகிற காலம் ஆரம்பமாகிவிட்டது. இன்றைக்கு தமிழகத்தில் யாரும் சந்தோஷமாகஇல்லை. அதிமுக இன்று தனி மரமாக நின்கிறது. மக்களும் ஆதரிக்கவில்லை, வேறு கட்சியும் அவர்களைஆதரிக்கவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+