தொகுதிகள் குறைந்தால் ஏற்க மாட்டோம்-இகம்யூ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
திமுக கூட்டணியில் மிகவும் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் அதை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை கருணாநிதி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் 8 இடங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டது.இடைப்பட்ட காலகட்டத்தில் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. எனவே அதை விட கூடுதலான இடங்களை எதிர்பார்க்கிறோம்.
இதற்குக் குறைத்து ஒதுக்கினால் அதை ஏற்க மாட்டோம். கூடுதல் இடங்களைப் பெற மார்க்டசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம்.
சிறிய கட்சிகளுக்கு இடங்களைக் குறைப்பதை விட பெரிய கட்சிகள் சற்றே இறங்கிப் போக வேண்டும் என்றார் மகேந்திரன்.












Click it and Unblock the Notifications