சங்கம் அமைக்க முயலும் டாஸ்மாக் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். அதைத் தடுக்க அரசு தீவிரநடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தனியார் மதுக் கடைகளை அரசே எடுத்து நடத்த ஆரம்பித்ததோடு, அவற்றை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம்நடத்தி வருகிறது. படித்த இளைஞர்கள் இங்கு காண்ட்ராக்ட் ஊதிய அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டு மதுவிற்பனை செய்து வருகின்றனர்.

இந்தக் கடைகளுக்கு மிடாஸ் நிறுவனத்தில் இருந்து தான் சரக்கு வாங்க வேண்டும் என்ற ஆர்டரும்போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என எதிர்க் கட்சிகள் கூறி வருகின்றன. இதுதொடர்பாக வருமான வரி ரெய்டும் நடந்தது.

இந் நிலையில் டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் சங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக்கூட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இதில் ஒயின்ஷாப்களில் பணியாற்றும் ஊழியர்களும் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதைத் தடுக்க அரசு தீவிரமாகமுயன்று வருகிறது.

நேற்று சங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மதுக் கடைகளில்பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் விதத்தில், ஊழியர்கள் அனைவரும் மண்டலஅலுவலகங்களில் நடக்கும் அவசரக் கூட்டத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற ஊழியர்களை அதிகாரிகள் அடைத்து சிறை வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.காலை, பகல், மாலை என மூன்று வேலையும் அவர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

கையெழுத்து போடாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டப்பட்டதாகவும், இதனால் யாரும்அங்கிருந்து வெளியாறாமல் இருந்து கையெழுத்து போட்டுவிட்டு மாலையில் வெளியில் வந்ததாகவும்தெரிகிறது.

பகலில் வெளியில் விட்டால் டாஸ்மாக் ஊழியர் சங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளில் இவர்கள்பங்கேற்கப் போகக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+