நுழைவு தேர்வு-உச்சநீதிமன்றத்தில் அரசு அப்பீல்?
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுசெல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆளுனர் பர்னாலாவும் ஒப்புதல் அளித்திருந்தார்.இந் நிலையில் இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ்பிளஸ் டூ படித்து வரும் மாணவர் நிஷாந்த் உள்ளிட்ட 3 மாணவர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது.அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு மட்டுமே சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே தொழில் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் ஆகியவை தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளன.
எனவே இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைநடைபெற வேண்டும். நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைஉடனடியாக மாநில அரசு தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் கல்வித்துறைஉயர் அதிகாரிகள், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆலோசனைக்குப் பின்னர் மேல் முறையீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
6 வார அவகாசம் தேவை:
இதற்கிடையே, நுழைவுத் தேர்வை நடத்த 6 வார கால அவகாசம் தேவை என்றுஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நுழைவுத் தேர்வு தொடர்பானசென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நகல் எங்களுக்கு இன்னும் வரவில்லை. அதுவந்தவுடன் பரிசீலித்து முடிவெடுப்போம்.
அதற்கு முன் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம்.
நுழைவுத் தேர்வை நடத்த வேண்டுமானால், குறைந்தது 6 வார கால அவகாசம்தேவை. தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும், கேள்வித் தாள்களைத் தயாரிக்கவேண்டும், நுழைவுச் சீட்டு வழங்க வேண்டும்,
தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறுபணிகள் உள்ளதால் இந்த அவகாசம் தேவைப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி மாதத்திலேயே நுழைவுத் தேர்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு அது நடைபெறவில்லை. இப்போது உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதால் நுழைவுத் தேர்வை நடத்தத் தயாராக உள்ளோம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உத்தரவு கிடைத்தவுடன் நடவடிக்கைகளைத்தொடங்கி விடுவோம் என்றார் விஸ்வநாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications