மனைவியை மீட்கக் கோரும் சார்லி சாப்ளின்!
சென்னை:
சார்லி சாப்ளின் வேடத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரவிச்சந்திரன் என்ற நகைச்சுவை நடிகர், தனது நண்பரின் பிடியில் சிக்கியுள்ள மனைவியை மீட்டுத் தருாறு கூறி கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் டிவி நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அத்தோடு ட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.பெரும்பாலும் சார்லி சாப்ளின் வேடத்தில்தான் இவர் காணப்படுவார். இதனால் சாப்ளின் ரவி என்றும் இவருக்கு அப்பகுதியில் பெயர் உண்டு. பார்ப்பதற்கும் சாப்ளின் போலவே காணப்படுவார்.
மற்றவர்களை சிரிக்க வைக்கும் இவருக்குள் பெரும் சோகம் புதைந்துள்ளது தெரிய வந்தது. சாப்ளின் வேடம் பூண்டு, கையில் தடியுடன், கூடவே தனது இரு மகள்களுடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ரவிச்சந்திரன் வந்தார்.
பின்னர் ஆணையர் நடராஜை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அப்புகா‘ல் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:
எனக்கு சபீதா குமாரி என்ற மனைவியும், தீக்ஷிதா, கங்காஸ்ரீ என்ற மகள்கள், ஹேமச்சந்திரன் என்ற மகன் உள்ளனர்.
நான் சினிமாவில், டிவி நாடகங்களில் நடித்துள்ளேன். நட்சத்திர ஹோட்டல்களில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்துவேன்.
என்னுடன் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜான்பாபு என்பவர் நண்பராக பழகினார். ஆனால் என் மனைவியைக் குறி வைத்தே என்னுடன் பழகியது பின்னர்தான் தெரிந்தது.
நான் நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வெளியூர் போய் விடுவேன். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜான் பாபு எனது வீட்டுக்கு வந்து எனது மனைவியுடன் நெருங்கிப் பழகி அவருக்கு ஆசை வார்த்தைகளை கூறி மனதை மாற்றியுள்ளார்.
என்னால் எனது மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க முடியாது என்று மனைவியிடம் கூறி அவரை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
கிட்டத்தட்ட 6 மாதம் எனது மனைவி ஜான்பாபுவின் வலையில் சிக்கியிருந்தாள். பின்னர் போலீஸில் புகார் கொடுத்து அவளை மீட்டேன்.
எனது மனைவி தனது தவறை உணர்ந்து மீண்டும் என்னுடன் வந்து விட்டாள். இப்போது தனது தாயார் வீட்டிற்கு போயுள்ளார். ஆனால் அங்கும் சென்று ஜான்பாபு எனது மனைவியை மீண்டும் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார்.
மேலும் என்னைக் கொலை செய்து விடப் போவதாகவும் மிரட்டுகிறார்.
இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளுடன் நான் தட்டுத் தடுமாறி வருகிறேன். ஜான்பாபுவைக் கைது செய்து அவரது பிடியில் உள்ள எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.
சாப்ளின் வேடத்தில் தனது இரு மகள்களுடன் வந்து ரவிச்சந்திரன் புகார் கொடுத்தால் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications