தயாரிப்பாளர் சங்க கசமுச!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Trisha
திரைப்படக் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் உள்ளிட்டவற்றைதொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்த விவகாரம் தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.

சங்க முடிவுகளை அமல்படுத்தாமல், சன் டிவிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறிசங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகஏ.எம்.ரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்குஎதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை அறிவித்து வந்தது. தொலைக்காட்சிகள் என்றுபொதுவாக கூறப்பட்டாலும் கூட குறிப்பாக சன் டிவிக்கு எதிராகவே இந்த அதிரடிநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பொங்கலன்று வெளியாகும் படங்கள் மற்றும் அதன் பிறகு வெளியாகும் படங்களின்படக் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள்உள்ளிட்டவற்றை தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் வழங்கக் கூடாது.

மீறி வழங்கினால் அந்தத் தயாரிப்பாளருக்கு தடை விதிக்கப்படும் என்பது உள்ளிட்டபல்வேறு அதிரடியான முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் அமல்படுத்தியது.

Namitha
இதை மீறி படக் காட்சிகளை சன் டிவிக்குக் கொடுத்த டிஷ்யூம் படத் தயாரிப்பாளருக்குரெட் கார்டு போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சங்கம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த தீவிர போக்குக்கு சன் டிவி தான் காரணம் எனதயாரிப்பாளர்களிடையே முனுமுனுப்பு எழுந்தது.

படங்களை வாங்குவதில் தர நிர்ணயத்தைக் கடைப்பிடிப்பது, தான் வாங்காதபடங்களுக்கு சரியான முறையில் திரை விமர்சனம் செய்வதில்லை, படவிமர்சனத்தின்போது பாதிப் படத்தை ஒளிபரப்பி விடுவது,

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என பார்த்து படங்களை ஒளிபரப்பு செய்வது என சன்டிவியின் பாரபட்சமான போக்கு காரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகநடுநிலையான தயாரிப்பாளர்கள் புலம்பினர்.

இந் நிலையில் டிவிகளுக்குப் படக் காட்சிகள் கொடுப்பதால் ஏற்பட்ட பிரச்சினையில்தற்போது சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் அதிரடியாக தலைவர் பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார். சன் டிவிக்கு ஆதரவாக இவர் செயல்படுவதாக கூறி மற்றஉறுப்பினர்கள் சேர்ந்து தியாகராஜனை பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கியதீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், கடந்தஒரு மாதமாக சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் சங்க முடிவுகளுக்கு விரோதமாகநடந்து வருகிறார்.

Madhumitha
சங்கத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளைக் குலைக்கும் விதமாகவும்,உறுப்பினர்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாகவும் அவர் நடந்துவருகிறார்.

சங்கத்தை செயல்பட விடாமல் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்து வருகிறது.தொலைக்காட்சிகளுக்கு படக் காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்டவற்றைகொடுக்க தடை விதித்து பல முக்கிய முடிவுகளை நிறைவேற்றினோம்.வினியோகஸ்தர்கள் சங்ககங்கின் கூட்டமைப்பு நமக்கு விடுத்த கோரிக்கையின்அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முக்கிய மடிவுகளை செயல்படுத்த விடாமல் நிர்வாகிகளுக்கு பலவகைகளில் இடையூறு செய்து வந்தார் தியாகராஜன்.

முக்கிய முடிவுகளை எடுக்க சங்கக் கூட்டத்தை கூட்டியபோதெல்லாம் வேறு வேலைஇருக்கிறது என்று கூறி கூட்டங்களுக்கு வராமல் தள்ளிப் போட்டார் அல்லதுகூட்டத்திற்கு வராமலேயே இருந்து வந்தார்.

குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சிக்கும் (சன்டிவி), தயாரிப்பாளர் சங்கத்திற்கும் கடந்தகாலங்களில் நல்ல வியாபார உறவு இருந்தது. மேற்படி தொலைக்காட்சி பல்வேறுநாடுகளில் ஒளிபரப்பைத் தொடங்கியதிலிருந்து இது சீர்கெட்டது.

சிறு தயாரிப்பாளர்களால் வெளிநாட்டு பட உரிமையை விற்க முடியாத நிலைஏற்பட்டது. படங்களை, 1,2,3 என தர நிர்ணயம் செய்து அந்த டிவி வாங்கத்தொடங்கியதால் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது.

Asin
இந் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி படக் காட்சிகளைப்போடுகிறார்கள், பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். மேலும், சங்க ஒற்றுமையைகுலைக்கும் விதமாகவும் நடக்கத் தொடங்கினர்.

சங்க உறுப்பினர்கள் சிலரை திசை திருப்பி, குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு ஆதரவாகதலைவரே செயல்பட ஆரம்பித்துள்ளதால், இனியும் அவர் தலைவர் பதவியில்நீடிப்பது சரியாக இருக்காது. உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுஅந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தில் செயலாளர்கள் அழகப்பன், முரளி, துணைத் தலைவர்அன்பாலயா பிரபாகரன், ரத்னம், பொருளாளர் சேகர், செயற்குழு உறுப்பினர்கள்சந்திரசேகரா, ஞானவேல்,

செல்வமணி, ராஜேந்திரன், ராமநாதன், கமீலா நாசர், ஜெயதேவி, பாலு,எஸ்.ஜே.சூர்யா, கிருஷ்ணகாந்த், மனோஜ் குமார் உள்ளிட்டோர்கையெழுத்திட்டிருந்தனர்.

இந்தத் தீர்மானத்திற்கு தயாரிப்பாளர்கள் ராஜன், ஹென்றி, சிவசக்தி பாண்டியன்ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள், அன்பாலயா பிரபாகரன், ஏ.எல்.அழகப்பன் ஆகியோருடன் கடும்வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற தயாரிப்பாளர்கள் அவர்களைவிலக்கி விட்டனர்.

தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ்நிறுவனத்தின் அதிபர் ஆவார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள சத்யஜோதிபிலிம்ஸ் இப்போது தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறது.

தொடர்ந்து சன் டிவியில் இவர்களது தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சன் டிவியின் முக்கிய நேரங்கள் சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒதுக்கப்படுவதாலும்,தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும், சன் டிவியை பகைத்துக்கொள்ள தியாகராஜன் விரும்பவில்லை.

Sneha
இதன் காரணமாகவே தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.

அதேசமயம், செயலாளர் ஏ.எல்.அழகப்பன் முன்பு திமுகவில் தீவிரமாக இருந்தவர்.இடையில் சன் டிவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, அழகப்பனை சன்டிவி நிர்வாகம் முற்றிலும் ஒதுக்கத் தொடங்கியது.

இதுவும் தொலைக்காட்சிகளுக்கு எதிரான தடை முடிவுகளுக்கு ஒரு காரணமாகஅமைந்தது என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

போலீஸில் புகார்:

இந் நிலையில் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம்,தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர்.

டி.ஜி.தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், ராதாகிருஷ்ணன், கே.ராஜன், செளந்தரராஜன் ஆகியோர் மீது சென்னை ஆணையரிடம் தரப்பட்டுள்ள புகாரில்,

தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற மேற்கண்டவர்கள் மயற்சிப்பதாகவும், சங்க உறுப்பினர்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும்,அவர்களிடமிருந்து சங்கத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+