போலி எப்ஐஆர்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
சென்னை:
போலி எப்.ஐ.ஆர். மூலம் கோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணத்தை போலீசார் மோசடிசெய்து தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடிஉத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல் நிலையங்களில் போலி எப்.ஐ.ஆர். புழக்கம் குறித்த தகவல்கள்சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.போலி எப்.ஐ.ஆர். சான்றுகளை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தாக்கல் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை பலருடன் சேர்ந்து போலீசார் மோசடி செய்ததும்அம்பலமாகின.
மேலும் போலி எப்ஐஆரைக் காட்டி போலீசாரும், போக்குவரத்துக் போலீசாரும்பொது மக்களை மிரட்டி பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
இதற்காக தனியார் அச்சகங்களில் போலீசாரே போலி எப்ஐஆர்களை அச்சடித்துவாங்கி இந்த மோசடிகளைச் செய்தனர். இது தொடர்பான செய்திகள்வெளியானபோதும் உடனடியாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை மூடி மறைக்கவே தமிழக அரசு முயன்றது.
இந் நிலையில் போலி எப்ஐஆர்களால் கோடிக்கணத்தில் பணத்தை இழந்தை நேஷனல்இன்சூரன்ஸ் உள்ளிட்ட சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தன.
இந்த விவகாரத்தி தமிழக போலீசாரே சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்கள் ஒழுங்காகவிசாரணை நடத்த மாட்டார்கள், அப்படியே விசாரித்தாலும் முழு உண்மை வெளியேவராது என்பதால், இந்த விகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.
அதில், இந்த சம்பவத்தில் தமிழக போலீஸார் மற்றும் பல்வேறு மருத்துவநிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இந்த வழக்கைதமிழக காவல்துறை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்.எனவே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நிான்கு மாதங்களில் இடைக்காலஅறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்பாவிபொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் முறைகேடுசெய்யப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது என்று கூறிய நீதிபதிகள்,
விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications