சீட் சிக்கலுக்கிடையே திருச்சி திக் திக் மாநாடு
சென்னை:
மதிமுக, இடதுசாரிகளுடனான இடப் பகிர்வே இன்னும் முடிவாகாதால் 3ம் தேதி தொடங்கவுள்ள திமுகமாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படுமா என்பதுசந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
திருச்சியில் நாளை மறுதினம் திமுகவின் 9வது மாநில மாநாடு தொடங்குகிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கானஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். கட்சிக் தாங்களி விரும்பும் தொகுதிகளின் பட்டியலைகருணாநிதியிடம் தந்துவிட்டன.
அவரும் இடதுசாரிகளுடன் முதல் கட்டமாகப் பேச்சு நடத்தினார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.அவர்கள் கேட்கும் அளவுக்குத் தொகுதிகள் தர திமுக தயாராக இல்லை.
அதே போல மதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் கேட்கும் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு தொகுதிகளையேஅதிக அளவில் ஒதுக்க கருணாநிதி முன் வந்துள்ளார். இதனால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.
மாநாடு தொடங்கவுள்ள நிலையில் இன்றும் நாளையும் மட்டுமே கூட்டணிக் கட்சியினருடன் பேசி முடிவுக்கு வரகால அவகாசம் உள்ளது. இரு நாட்களில் தொகுதி எண்ணிக்கை விஷயத்தில் உடன்பாடு ஏற்பட்டுவிடுமா என்பதுசந்தேகமாகவே உள்ளது.
இதனால் திட்டமிட்டபடி மாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படுமா என்பதுசந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி, வைகோ, ராமதாஸ் உள்பட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் சில தலைவர்கள் மாநாட்டைப்புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் படு டென்சனில் உள்ளது அறிவாலயம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications